284
 

6. பிரமன் முதலியோர்மாட்டும் தன் ஆணைசெலுத்தி அவரால் பூசிக்கப்படுதல் ஈசத்துவம் என்னும் செல்வம்.

7. உலகமுழுவதையும் தன்வயமாக்குதல் வசித்துவமென்னும் செல்வம்.

8. புலன்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை கரிமா என்னும் செல்வம் (இவ் வைந்தும் மனத்தால் எய்துவன). இவற்றை முறையே, 1. நுண்மை, 2. பருமை, 3. மென்மை, 4. விரும்பிய தெய்தல், 5. நிறைவுண்மை, 6. ஆட்சியனாதல், 7. கவர்ச்சி, 8. விண்டன்மை என்ப. கரி - சான்று. மா - செல்வம்.

(9)

629. தானே அணுவுஞ் சகத்துத்தன் 1நொய்ம்மையும்
மானாக் 2கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் 3வியாபியு மாம்எட்டே.

(ப. இ.) இத் திருப்பாட்டு மேற்குறித்த எண் பெரும்பேறுகளையும் முறையே ஓதுகின்றன.

(அ. சி.) அணு - அணிமா (1). சகம் - மகிமா (2). நோன்மை - கரிமா (3). ககனம் - லகிமா (4). பரகாயத்தேகம் - பிராப்தி (5). தானாவது - பிராகாமியம் (6). ஆனாத உண்மை - ஈசத்துவம் (7). வியாப்பியம் - வசித்துவம் (8). இவை அட்டசித்திகளாகும்.

(10)

630. தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கிய வரமுத்தி முந்திய வாறே.

(ப. இ.) ஆவி யோகப்பயிற்சியால் அணுவாக நின்று பல வுயிர்களொடும் செறிந்து அவைகளைத் தாங்கியகாலத்தும் அவற்றை அழித்த காலத்தும் அதற்கோர் மாறுதலில்லை. எல்லா இடங்களிலும் உயிர்களிலும் கலந்து தோன்றினும் ஒப்புயர்வில்லா வீடுபேற்றுக்கு முன்னேறும் வழியாம். செறிவு - வியாபகம். முந்தியவாறே என்பதற்கு முன்னிருந்த படியே என்றுமாம் (நிருவிகாரம்).

(11)

631. முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தை செயச்செய மண்முதல் தேர்ந்தறிந்
துந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.4

(ப. இ.) ஒருநாழிகைக்கு விநாடி அறுபது. ஒருநாளுக்கு நாழிகை அறுபது. ஒரு பகலுக்கு நாழிகை முப்பது. அம் முப்பது நாழிகையையும்


(பாடம்). 1. நோன்மையும், 2. ககனமும். 3. வியாப்பியு.

4. சிந்திப்பார். அப்பர், 5. 97, 1 - 30.