(அ. சி.) தாரகைபூவில் சகலத்தியோனிகள் - தாரகைகளே உலகில் சகல உற்பத்திக்குங் காரணம். (10) 841. முற்பதி னைந்தின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைந்திற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைந்தும் அறியவல் லார்கட்குச் செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.1 (ப. இ.) திங்களின் கலைகள் முதற் பதினைந்தில் முளைத்து முறை முறையாகப் பெருத்திடும். பிற்பதினைந்தில் பெருத்த அவை முறை முறையாகக் குறைந்து சிறுத்திடும். இத்தகைய மாறுதலை உற்றுநோக்க வல்லார் சுட்டி யுணரப்படும் பொருள் அனைத்தும் தோன்றி மறையும் அழிபொருள்கள் என்னும் உண்மை தெளிவர். மாற்றம் தெளிந்து மனம் கழியநின்ற மறையோனாகிய சிவபெருமான் திருவடியைச் சேர்வர். (அ. சி.) முன்பதினஞ்சு - வளர்பிறை. பின்பதினஞ்சு - தேய்பிறை. (11) 842. அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே. (ப. இ.) மூலத் தீயை எழுப்பி மதிமண்டிலத்துக் காணப்படும் திங்கட் கதிருடன் சேர்த்தால், அங்குக் காணப்படும் திங்களால் அக் கதிர்கள் அமைவுற்று ஐந்தாக விரியும். திங்கட் கதிர் விரிந்த காலத்து விண்மீன்களாகிய தாரகைகள் மடங்குவதுபோன்று ஐம்புலன்களும் அகத்திங்கள் கதிர் விரிந்த காலத்து மடங்கும். இந் நிலைக்குத் திங்கட்கதிர் அங்கி விரவுகின்ற யோகம் என்று பெயர். மதிமண்டிலம்: மிடறு முதல் ஆயிர இதழ்த் தாமரை வரையாகும். ஆயிர இதழ்த் தாமரையை வெளி என்றும் உச்சித்தொளையென்றும் கூறுவாருமுளர். வெளி என்பதே பெருவழக்கு. ஊட்டத்து - கொடுப்பதில். சசி - திங்கள். தாரகை - விண்மீன். போக்கற - புறம்போதல் மடங்க. (அ. சி.) ஊட்டத்து - கொடுப்பதிலே. (12) 843. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.2 (ப. இ.) திங்களின் பதினாறு கலையும் உடம்பின்கண் புறம் போகாது அகத்தே பொருந்த நிற்கின்ற ஒளிநிலை கண்டு தாழ்வானவர்கள் உண்மையை நினைக்கின்றிலர். அதனால், அவர்கள் சினந்து உடலைக்
1. சேற்றுவளர். புறநானூறு, 27. 2. திருநாமம் அப்பர், 6 - 95 - 6.
|