ன்றும். அவற்றினின்றும் பூதங்கள் தோன்றும். பூதங்கள் உலகமாய் தெரியும். இவ் வகையாகக் கூறுவாருமுளர். எழுச்சியம்மை - ஆங்காரதத்துவம். (49) (அ. சி.) மாரன் - சிவன். அங்குலி...பார்த்தனர் - மாயையும் உயிர்க் கூட்டங்களும் தங்கி இருக்கும் அதோமுகத்தைப் பார்த்து அணுக் கூட்டங்களைக் கிளப்பிவிட்டும் பின் புறம் நோக்க சத்தியருள் பெற்ற சதாசிவன் முதல் பிரமன் வரை உள்ள ஐவரும். சடங்கு - ஐந்தொழில். (37) 1168. சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனி னுள்ளே கருதுவ ராகில் தொடர்ந்தெழு சோதி தொளைவழி ஏறி அடங்கிடும் அன்பின தாயிழை பாலே. (ப. இ.) புறத்தே வேள்வி முதலிய சடங்குகள் செய்து தவம் புரியும் நன்னெறியாளர் அகத்தேயும் அவ் வழிபாட்டைப் பயில்வாராயின் உயிர்க்குயிராகிய திருவருளம்மை பேரொளியாகத் தோன்றுவள். அவ்வருளொளியைத் துணையாகப்பற்றி மேற்சென்று அன்பின்கண் அடங்குதல்வேண்டும். அங்ஙனம் அன்பின்கண்ணடங்கி நிற்பார் அம்மையார் திருவடியைச்சேர்வர். (அ. சி.) கடம் - தேகம். (38) 1169. பாலித் திருக்கும் பனிமல ராறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம் மூலத்து மேலது முத்தது வாமே. (ப. இ.) அகநிலைக்களங்களாகிய ஆறாதாரமும் தாமரை மலர்களாக அமைத்துக்கொள்ளப்படும். அவற்றுடன் பொருந்திக் களித்திருக்கும் அந்நிலையும் திருவருளம்மையைச் சேரச் செல்வார்க்கு நீக்குதல் வேண்டும். அந் நிலையினையும்நீக்கி மேலோங்குதல் வேண்டும். அங்ஙனம் மேலோங்குதற்குத் துணையாம் மந்திரம் 'நமசிவய' என்பதாகும். இதுவே முத்துப்போன்று தனி முதல் தமிழ் மந்திரமாகும். (அ. சி.) பனிமலர் ஆறினும் - ஆதாரங்கள் ஆறினும். (39) 1170. முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி1 வித்தகி என்னுள்ள மேவிநின் றாளே. (ப. இ.) முத்துப்போலும் அருளொளி வீசும் திருமுகத்தினையுடையவள். ஒவ்வொரு திருமுகத்தும் மும்மூன்று கண்களையுடையவள். அறிவாற்றலள்; திறமைமிக்கவள். உயிர்கள் உய்யும் பொருட்டு, அருளால் திருமேனி கொள்பவள். விரிந்த திருச்சடையினையுடையவள். பத்துக்
1. தோலும். 8. திருக்கோத்தும்பி, 18.
|