85
 

(ப. இ.) உடம்பாகிய பந்தல் திடமொழிந்து நலிந்து மெலிந்து பிரிந்தது. உடம்பினை நடத்தும் பண்டாரமாகிய உயிர் அவ்வுடலுடன் பிணைந்து நிற்கும் கட்டற்று நின்றது. அவ்வுடம்பின்கண் காணப்படும் ஒன்பது வாயிலும் ஒருமிக்க அடைபட்டன. அனைவரும் துன்பம் எய்தும்படியான முடிவுகாலம் வர அன்புடையவர்கள், மேலும் மேலும் அழுது நீங்கினர். ஆவியும் பிரிந்தகன்றது.

(அ. சி.) பந்தல் பிரிந்தது - உடல் கட்டுக் குலைந்தது. பண்டாரம் - உயிர் நிலை. துரிசு - முடிவு.

(10)

197. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை1 யொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட2
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

(ப. இ.) பெருநிலம் ஆளும் பொருவில் வேந்தன். நம்பேரூராம் கோநகர்த் தலைவன். முன்னர்க் கரி பரி தேர் ஏறிச்செல்லும் அவனே இப்பொழுது சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆட்சுமை ஊர்தியாகிய சிவிகை என்னும் பாடையின் மேல் ஏறிச்சென்றனன். இறுதி முறையாக நாட்டவர்கள் பின் சென்றனர். முன்னே நெய்தற் பறை முதலிய வாழ்த்தியங்கள் கொட்டப்பட்டன. இதுவே நாட்டுக்கு நம்பி நானிலம் விட்டு மேனிலம் எய்தக் கூடுவிட்டுப் பாடுபட்டுப் போகும் முறையாகும்.

(அ. சி.) நாடு - தேகம் காட்டுச் சிவிகை - பாடை; சுடுகாட்டுக்குச் செல்லும் சிவிகை.

(11)

198. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவருஞ்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்3
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

(ப. இ.) மூன்று முப்பது தொண்ணூறு அதனுடன் சேரும் ஆறு ஆகிய தொண்ணூற்றாறு மெய்களும் செம்மையாக அமைக்கப் பெற்ற மதில் முதுலியவற்றையுடைய கோட்டை போன்ற உடம்பினுள் வாழும். அச் சிறந்த உடம்பாகிய கோவில் சிதைவுற்றால் அப்பொழுதே அத் தொண்ணூற்றாறு மெய்களும் சார்பின்மையால் ஓட்டெடுக்கும் என்க.

(அ. சி.) முப்பது முப்பது முப்பத்தறுவரும் - 96 தத்துவங்களும். செப்பமதிளுடைக்கோயில் - தேகம்.

(12)

199. மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.


1.வெள்ளை. புறநானூறு, 286.

2.அரிசனம் சிவஞானசித்தியார், 2-4.

3.துருத்தியாங். அப்பர், 4. 25-4.