(ப. இ.) காட்டுத் தீ வீட்டுத் தீ ஏட்டுத் தீ என்று சொல்லப்படும் ஆகவனீயம், காருகபத்தியம், தென்திசை அங்கியாகிய முத்தீயினையும் எழுப்பி வடபால் முனிவர்கள் தீ வேள்வி ஒன்று புரிந்தனர். அதன்கண் நின்று அவர்தம் செருக்குருவாம் யானை ஒன்று வந்தது, யானை என்பது யான் + ஐ எனப் பிரிந்து யானே தலைவன் என்று பொருள் தரும் ஐ - தலைவன். அத்தி - யானை. அந்த யானையைச் சிவபெருமான் உமையம்மையார் நடுங்க நகத்தால் உரித்துப் போர்த்தனர். இவ்வியானையின் அழிவு முன் ஓதிய தக்கன் வேள்வியில் வேள்வி உணவால் உடலுரம் "உண்டாமென வந்து புகுந்த தேவர்கள் பலரும் அழிந்தமையை ஒக்கும். உமையம்மையார் அஞ்சுவது செருக்குறும் உயிர்கள் துன்பப்படுகின்றதனை நோக்கியே அன்றித் தன்னை நோக்க அன்றென்க. முத்தீயினையும் முறையே கல்வி கற்பு கடவுட்காதல் எனவும் கூறலாம். (அ. சி.) முத்தீ. . .வேள்வி - நேமி வனத்தார் செய்த யாகம். நேமி வனத்தார் - ஆரியர். (6) 331. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்1 தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. (ப. இ.) மூலாதாரத்திலுள்ள நடுநாடி வழியாக உயிர்ப்பினை ஏற்றி மேலைத்துவாரமாகிய உச்சித்துளையிற் செலுத்துதல் அகவழிபாட்டின் அடிப்படை. அதன் பின்னரே புறவழிபாடு நிகழ்தல் வேண்டும். உச்சித் துளையிற் செலுத்தி நோக்கின் திருவருள் வெளியில் ஒப்பில் ஒருவனாம் சிவபெருமான் காட்சி கொடுத்தருள்வன் அங்ஙனம் வழிபட்ட மாணியின் ஆருயிரைக் கொள்ள வந்த காலனை உதைத்துக் காய்ந்தனன் சிவன். அங்கு 'அவனேதானே ஆகிய அந்நெறி, ஏகனாகி' நிற்கும் முறையால் சிவபெருமானாக மாணி நின்றனன். அக் குறிப்பு யோகமாய் என்பதனால் பெறப்படும். அவ்வருளிப்பாட்டினைச் செய்து நலமாய் எழுந்தருளியிருக்கும் திருவூர் கடவூர் என்ப. எவராலும் கடக்கவொண்ணாத காலனைக் கடப்பதற்கு நிலைக்களமான இடமாதலால் அவ்வூர் கடவூர் என்று பெயர் பெற்றது. கூற்றுவனை உதைத்தது, சிவனடியார்பால் அவன் அணுக நினைப்பதும் உய்தியில்லதோர் பெருங்குற்றம் என்பதனை உணர்த்துதற் பொருட்டு என்க. (7) 332. இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித்2 தங்கண் அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. (ப. இ.) மால்மகனாகிய காமன் சிவபெருமான் அறம் போதிக்குங்கால் காமத்திறம் எழுப்ப உன்னினன். உன்னிவந்து பூங்கணை தொடுத்
1. நீற்றினை. அப்பர், 4 . 49 - 2. 2. விளவு. சம்பந்தர், 2 . 110 - 2. " கண்ணுதல். சிவஞான சித்தியார், 1 - 2 - 25.
|