களித்தல் - பொன்வண்ணமான விண்ணுலகத்தை ஆவி நீத்தோர்க்கு அருளுடனளித்தல் ஏற்படும். அரணன் திருவுருவாதல் - புகலிடமாம் சிவபெருமானின் திருவுருப்பெறுதல். மூவேழாங்...தோனே - வெண்மை செம்மை கருமை என்னும் முப் பண்புகளும் ஞாயிற்றின் ஏழுநிறத்துடன் உறழ இருபத்தொரு நிறமாகும்; அவ் வகையான இருபத்தொரு நிறங்களினும் விரவி மறைந்து நின்றியக்கும் சிவபெருமானை அடைதற்காம் மெய்யுணர்வுக் கேள்வியுடையவர் செந்நெறி வழக்குணர்ந்தவராவர். கரன் - உயிர்தொறும் மறைந்து நிற்கும் கள்வன்; கரப்போன். (அ. சி.) சிறை - சரீரம். இரணம் சேர் பூமி - செல்வம் பொருந்திய நாடு. அரணன் - பரமசிவன். மூவேழாங்கரன் - சூரியன்; சிவன். (67) 687. ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை1 காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே. (ப. இ.) அலையொலிக்கும் கடலாற் சூழப்பெற்ற உலகமெலாம் சூழ்ந்து கால்நோவ வலம்வந்தாலும் நிறைந்த பயனில்லை. காதலி... வாரே - பேரன்பாகிய காதலினால் முழுமுதற் சிவபெருமானைக் காணத்தக்க இனிய மெய்யடியா ரகமுகநாட்டம் செய்வோராவர். அத்தகையோர், ஆருயிர்த்தலைவனாம் சிவபெருமான் அமர்ந்து விளங்கும் அகத்திருக் கோவிலை உணர்வர். நகர் - திருக்கோவில். (68) 688. மூலமுதல் வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே. (ப. இ.) ஆறுநிலைகளுக்கும் ஓங்கார முதல்வராம் ஆனைமுகன் (பிள்ளையார்,) அயன், அரி, அரன், ஆண்டான், ஐம்முகன் என ஆறு கடவுளர் சொல்லப்படுவர். ஆண்டான் - மகேசன். ஐம்முகன் - அருளோன்; சதாசிவன். பரவிந்து...பாதமே - நிறைந்த திருவருள், தொழிலும் அறிவும் ஒளியும் ஓசையும் முடிவிடத்தில் நின்று இயக்கும். அதுவே அருளாற்றல். அதுவே பரை; அதுவே பரன் திருவடி. பரவிந்து - அருளொளி. பரநாதம் - அருளோசை. (69) 689. ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே. (ப. இ.) நிலைக்களம் ஆறினையும் காணும் மனவொருக்கமாகிய யோகத்தினால் அதனைத் தூண்டித் தொழிற்படுத்துந் தெய்வங்களாகிய
1. கானநாடு. அப்பர், 5 : 99 - 6.
|