41
 

வாயுறை வாழ்த்தாகலான் என்க. வாழ்த்தாகலான் என்க. அம் முறையினை நாடாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் கேடும் உடன் தோன்றிக் கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் பல்வகைச் செல்வமும் கெடும். மன்னனும் உறைகடுகி ஒல்லைக் கெடுவான்.

(அ. சி.) அவன் நெறி - அரச நீதி. செல்வ நரபதி - செல்வமும் அரசனும்.

(2)

97. வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்1
வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடது வாகுமே.

(ப. இ.) தவக்கோலத்துக்குரிய தனிப்பெரு நெறியில் நிற்கும் ஆற்றல் இல்லாதவர், அத் தவக்கோலத்தினை மேற்கொண்டு கரவொழுக்கம் ஒழுகுவதால் உண்டாகும் பயன் யாது? தவக் கோலத்திற்குப் பொருந்தியவாறு செம்மையாக ஒழுகுவாரின் தவக்கோலம், உண்மைக் கோலமாய் வண்மைப் பயனை நாட்டிற்கும் பிறர்க்கும் எண்மையில் எய்துவிக்கும் திண்மைச் சிவக்கோலமாகும். உண்மைத் தவக்கோலத்தின் வழி ஒழுகாத தீப்பண்பாளரை, வெற்றி பொருந்திய வேந்தன் தவக்கோல நெறியில் நிற்பித்தல் வேண்டும். அங்ஙனம் செய்தால் அம்முறைமை நாட்டிற்கும் நற்றவத்தோர்க்கும் நல்லின்பந் தருவதாகும். வீடு - நல்லின்பம்.

(3)

98. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே.2

(ப. இ.) ஆருயிர்களின் அறிவை மூடித் தடை செய்துகொண்டிருக்கும் தொன்மலம் மூடம் எனப்படும். அதன் காரியம் யான் எனது என்னும் செருக்கை விளைவிக்கும் ஆணவம் ஆகும். அவ் வாணவம் கெடாதார் உயர்ந்தார்க்குரிய உச்சிக்குடுமியும் பூண்நூலும் பிறவும் பூண்டு உலகை ஏமாற்றுவதால் விளையும் நன்மை யாது? அதற்கு மாறாக விளையும் தின்மைக்கு அளவே இல்லை. அஃதாவது உலகமும் உயிர்களும் வாடி வதங்கும். பெருவாழ்வினையுடைய மன்னனும் பெருமை குன்றுவன். ஆதலால் அவர்தம் பொய்ம்மையை மெய்ம்மையாளரைக் கொண்டாராய்ந்து ஆடம்பரமாகக் கொண்டுள்ள உச்சிக் குடுமியையும், பூணூலையும் அறுப்பித்தால் நாட்டுக்கும் அப் பொய் வேடத்தார்க்கும் நன்மை பயப்பிப்பதாகும். நாட்டவர் அவரை மெய்த்தவரென்று நம்பித் தானஞ் செய்கின்றனர். அவ்வாறு செய்கின்றவர் பெரும் பாவத்தைப் பெறுகின்றனர். என்னை? அவர் ஈந்த பொருள் தீவழிச்சென்று பெருந் துன்பத்தை உலகினுக்குப் பலகாலும் பலவகையாலும் ஈந்தமையான் என்க. இப்பொருள் "நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணார் இல்" என்னும் செந்தமிழ்ப் பொது


1. மெய்யெலா. 12. மெய்ப்பொருள் நாயனார், 7.

2. நெக்கு. அப்பர், 5 . 90 - 9.