465
 

சிவபெருமானுடன் அம்மை பொருந்தியிருப்பள். அதனால் ஆருயிர்க்கும் பிரிவில்லாப் பேரின்பம் உண்டு. எல்லையில்லாத வியத்தகு இன்பம் - நிரதிசயானந்தம்.

(31)

1162. அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.1

(ப. இ.) உறுதிகொள்ளுதலில்லாது உய்யும் நெறி அதுவோ இதுவோ எனத் தடுமாறும் ஆசையை நீக்கி, அருளம்மையை அகத்தும் புறத்தும் ஒருங்கு வழிபட்டு, உயிர்ப்பு ஒடுங்கியிருந்து இடையறாது நோக்கினால் ஊழையும் உப்பக்கம் காணலாம். இதுவே விதியை வெல்லுவதாகும். அவ் வம்மை அமிழ்தம் பொழிகின்ற திங்கள் மண்டிலத்தை இருக்கையாகக் கொண்டவள். அவள் கூறியருளிய மண்டிலம் மூன்றாகும். 'சிவயநம' எனச் சிந்தித்தலே விதியை வெல்லும் மதியாகும்.

(அ. சி.) மதிமலராள் - அமுதம் சொரிகின்ற மண்டலத்தில் உள்ள செந்தாமரைப் பீடத்தாள்.

(32)

1163. மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்று மிலக்குற வாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

(ப. இ.) மோகினியாகிய உணர்வுமெய் - அசுத்தமாயை காலம் நியதி கலை என்னும் மூன்று பிரிவினையுடையது. அவை பன்னிரண்டாகக் காணப்பெறும் கலைமுடிவிற் காணப்படும். இதற்குக் குறிக்கோளாக இருப்பது மாமாயை என்னும் தூமாயை. இவற்றைப் பதினாலு கலையாகவும் பன்னிரண்டு கலையாகவும் ஏற்றனள் அம்மை.

(33)

1164. இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்
உந்திய சோதி இதயத் தெழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.2

(ப. இ.) இந்துவாகிய தூமாயையினின்றெழும் முப்பத்தாறா மெய்யாகிய ஒலி நாதம் நிறையுயிர் அகத்துப் பகலவன்போல் கதிரொளியாகத் தோன்றிச் செவியில் (வைகரி) பொருந்துமாறு நாக்கில் எழும்


1. அனுச. அப்பர், 5. 65-6.

" ஊழையும். திருக்குறள், 620.

" சிவாய. நல்வழி, 15.

2. வைகரி, உள்ளுண, வேற்றுமைப், சூக்கும, சிவஞானசித்தியார்,

1. 1. - 20 - 3.

" உன்னலரும். சிவப்பிரகாசம், 3.