1119
 

பேற்றைச் (2615) செயன் முறையில் எளிதிற் கூட்டுவிக்கும் திருவூர். திருவாரூரிற் பிறக்கப்பேறெய்தும். திருக்காசியில் இறக்கப் பேறெய்தும். தோன்ற மறையத் தொழப்பேறாரூர்காசி, ஆன்றதில்லை முப்பால் அறி.

(அ. சி.) கும்பிட - யாவரும் வணங்கும்படி. சிவலோகம் - பொற்றில்லை.

(4)

2707. மேதினி மூவேழ் மிகுமண்டம் ஓரேழு
சாதக மாகுஞ் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோ டந்த நடானந்த நாற்பதப்
பாதியோ டாடிப் பரனிரு 1பாதமே.

(ப. இ.) நாதத்தையும் நாத அந்தத்தையும் மேற்கொண்டு 'சீலம் நோன்பு செறிவு அறிவு' என்னும் நானிலையும் நாற்பாதம் எனப்படும். அதனை அருள்பவள், திருவருளம்மையாவள். அவள் ஆண்டவனின் செம்பாதியாவள். அவளுடன் சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றனன். அவன்றன் திருவடியிணையே மூவேழ் உலகினையும் ஆட்டுவிப்பதாகும். ஓரேழண்டத்தையும் ஆட்டுவிப்பதும் அவையே. கைக்கொள்வோர் தகுதிக்கேற்பப் படிமுறை போன்று விரிந்த நெறிகள் நூற்றெட்டு. அவற்றையும் அவன் திருவடியே ஆட்டுவிக்கின்றன.

(அ. சி.) பாதி - சிவன் பாதிச் சரீரி ஆகிய தேவி.

(5)

2708. இடைபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே.

(ப. இ.) அகத்துக் காணப்படும் இடைகலை பிங்கலை இரண்டும் புறத்து முறையே பொன்மலையாகவும் இலங்கையாகவும் கொள்ளப்படும். நடுநாடியாகிய சுழுனை தில்லைவனம் எனப்படும். நடுநாடியே எல்லாவற்றையும் நடத்துகின்றது. அதுபோல் புறத்துத் தில்லைவனம் பொன்மலை முதல் இலங்கை யீறாகக் கொள்ளப்படும் நிலமனைத்தையும் நடுநின்று நடத்துகின்றது. அதனால் 'கடவும் தில்லைவனம் கைகண்ட மூலம்' என ஓதியருளினர். யாங்கணும் நீக்கமற நிறைந்தொன்றி நிற்பவன் 'படர்வொன்றி' யாவன். அவனே பரமாம் பரமுமாவன். பரமாம்பரம் - மேலாம் விழுப்பொருள்.

(6)

2709. ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா 2நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே.


1. பரிதி. அப்பர், 5. 94 - 5.

" விரிவிலா. " 4. 60 - 9.

2. ஏவியிடர்க். அப்பர், 6. 72 - 10.

" பூமருவுங். 12. சம்பந்தர், 409.