(அ. சி.) வாய்ந்து - சித்திபெற்று. நீந்து - மிகுதியாக. பாலிக்கு மாறு - காப்பாற்றுமாறு. (4) 783. நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி யூனே. (ப. இ.) நாக்கின் நுனியால் அண்ணமுகட்டில் காணப்படும் உச்சித்தொளை வழியைத் துருத்திபோல் குவித்துவைத்து அடைத்தால், அங்கு உயிரும் உயிர்க்குயிராம் சிவனும் உடங்கியைந்துறைவர். திருவருட் கண்ணால் காணுதலின் ஆவி முத்தேவரையும், முப்பத்து முக்கோடி தேவரையும் எளிதிற் காண்பர். உடலுக்கு நூறுகோடி ஊழியாயினும் அழிவில்லை என்க. சிவிறிடல் - விசிறியின் அடிப் பகுதிபோல் விரிந்து குவிதல். மூவர்: அயன், அரி, அரன். மூப்பத்துமூவர்: பகலவர் பன்னிருவர், முனிவர் (உருத்திரர்) பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்ப. சதம் - நூறு. ஊன் - உடல். (5) 784. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியலு மாமே.1 (ப. இ.) உயர்விடமாகிய நெற்றிநடுவில் உடலமிழ்து ஒழுகும். இவ்வமிழ்தினை விந்து என்பர். இதனைக் கீழ்நோக்கிச் செல்லவிடாமல் மூச்சுப் பயிற்சியால் உச்சித்தொளைக்கு ஏற்றின் அது வானமிழ்து என்னும் பெயர்பெறும். உச்சி உயர்ந்த இடமாதலின் வான் எனப் பெயர் பெற்றது. ஊறல் - இடையறா ஊற்றுடைய புனல். இதனை ஆகாயக் கங்கையென உருவகித்தனர். திருவருள் துணையால் இந்நிலை எய்தினார்க்குத் தேனூறலாகிய திருவடியின்பம் உண்டு; திருவடி யுணர்வாகிய தெளிவும் உண்டு. (கங்கை மதி பாம்பு கடுக்கை என்னும் நான்கும் இறைவன்முடிமேல் உள்ளன. ஈண்டு ஒப்புநோக்குங்கால் கங்கை: வானூறல். மதி: ஊனூறல். பாம்பு: குண்டலியாற்றல், கடுக்கை: தேனூறல் என்ப.) (அ. சி.) ஊன்ஊறல் - சுக்கிலம். வான்ஊறல் - அமுதம். தேன்ஊறல் - அமுதத்தின் சுவை. (6) 785. மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே. (ப. இ.) மேல்வாய் அகத்துக் காணப்பெறும். அணாக்காகிய உள்நாக்கில் இரு மூக்கின் வழியாகவும் வரும் உயிர்ப்பி (பிராணாவாயு)னை
1. கங்கையும். 12. தடுத்தாட்கொண்ட புராணம், 1.
|