424
 

1045 .ஆதி விதமிகத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.1

(ப. இ.) சிவபெருமானின் ஆதித் தொழிலாகிய படைப்புப்பெருக, பேரளியாகிய பெருங்கருணைபுரிந்தவள் திருமாலின் தங்கை. அந்நேரிழையின் திருப்பெயராகிய நமசிவய என்னும் தமிழ் ஐந்தெழுத்து அருள் மந்திரத்தை முறையாக எட்டிதழ்த் தாமரை வரைந்து அதன் மத்தியில் அமைக்க. பலமுறை உருவேற்றத் திருவருள்ஒளி பெருகும். அது பெருக, அகக்கண் திறந்து முக்காலவுணர்ச்சியும் கைகூடும். இதனை யோகக் காட்சி என்ப. திருமால் - பேரன்பு வாய்ந்த பித்தனார்; சிவபெருமான். முக்காலம்: இறப்பு, நிகழ்வு, எதிர்வு. தண் - பெருங்கருணை.

(25)

1046 .மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

(ப. இ.) உணர்த்துமெய் ஐந்தும், உணர்வுமெய் ஏழும், உட்கலன் நான்கும் ஆகப் பதினாறுமெய்களும் அம்மையால் இயக்கப்படுகின்றன. அதனால் அம் மெய்யினை அவளாகவே கூறுவர். உலகுயிர்கட்கு ஆதாரமாய் எங்குஞ் செறிந்தவள். ஒலியும் அப்பால் ஒலியுமாகிய நாதநாதாந்தத்தள். அவள் நமக்கு நல்லருள் புரிவாள். மேதை - அறிவு; சுத்தவித்தை.

(அ. சி.) மேதாதி ஈரெட்டு - மேதை முதலிய தத்துவங்கள் பதினாறு.

(26)

1047 .அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.2

(ப. இ.) குருவருள்பெற்றுத் திருவைந்தெழுத்து ஓதும் நிறையருள் பெற்றவரே உண்மை சொல்லவாரீர். நன்னெறி எய்தாத ஏனை மக்கள் திருவருள் பெற்று மேலுலகங்களில் தலைமையாக இருப்பவரையும் முத்தொழில் புரிவோரையும் மெய்த்தேவரெனவே மயங்கி வழிபட்டு மருள்நிறைந்த சிந்தையராகின்றனர். அவர்தம் மனமயக்கத்தை மாற்றிப் பேரின்பப் பெருவாழ்வை நல்கியருளும் சிவபெருமான் ஒருவனே பிறப்பு இறப்பில்லாத பெருங்கடவுளென்போம்.


1. அருந்தின்பத். சிவஞானசித்தியார், அளவை - 7.

" மின்னிடைச், 8. திருப்பொற் சுண்ணம், 13.

2. தாயினு. அப்பர், 5. 100 - 9.

" செத்துச். " " " 2.

" நூறு. " " " 3.