828
 

இறைவன்மாட்டு இன்புறுதலும் நற்றவத்தின்மாட்டு அன்புறுதலும் மெய்ஞ்ஞானத்துமாட்டுக் காதலுறுதலும் மேற்கொண்டார் மெய்ஞ்ஞானப் பண்பினராகவே இருப்பர். இன்பு அன்பு காதல் பண்பு என்னும் நான்கும் முறையே கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை என்னும் நான்குமாம்.

(10)

2074. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மெற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோருக்கே.

(ப. இ.) அனைத்துயிரும் படிப்படியாகச் செவ்விபெற்று மேற்கொள்ளத்தக்க அழிவில் மெய்த்தவம் ஒன்றுண்டு. அத் தவமே சிவத்தைப் பேணும் தவமாகும். இத் தவமே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையாக நவிலப்படும். இப் பெருந் தவவாயிலாக எய்தற்கரிய திருத்தாளும் ஒன்றுண்டு. அத் திருவடியினைத் தலைப்படும் அறிவினுள் அறிவாம் மெய்ந்நெறியும் ஒன்றுண்டு. இவற்றை மேற்கொள்ளும்வண்ணம் விழைந்துநிற்பார் சிவக்கிழமையராவர். அந்நல்லார்க்கு எல்லாம் எளிதாகவும் இனிதாகவும் கைகூடும் என்க.

(11)

2075. சார்ந்தவர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடுங்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடுஞ்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் 1வாரன்றே.

(ப. இ.) திருவருட்டுணையால் திருவடியுணர்வால் சேர்ந்தவர்க்கு ஆர்ந்த இன்பம் கொடுத்தருளும் செம்மேனி எம்மான் சிவபெருமான். நன்னெறிச்சென்று நாடாது நீங்கியவர் பேர்ந்தவராவர். அவர்க்குத் துன்பப் பிறவியைக் கொடுத்தருள்வன். நன்னெறி நான்மையில் அறிவில் அறிவு என்று சொல்லப்படும் மேனெறிச் சென்றவர் கூர்ந்தவராவர். "கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும்" (தொல் சொல். 314) ஆதலின் ஆருயிர்கள்மாட்டு அடங்கியிருந்த சிவவிளக்கம் சிவப்பணியால் மிகும். அங்ஙனம் மிகப்பெற்றவர் கூர்ந்தவராவர். அத்தகையோர்க்கே திருவடியிணையினைக் காட்டி அருள்வன். அவ் வருள்வழிச்சென்று சார்ந்தவர் தேவராகிய சிவபெருமானை உணர்ந்தவராவர். உணர்தல் - சிவனின்பம் நுகர்தல்.

(12)

2076. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரன்றே.2


1. சார்ந்தாரைக். சிவஞானபோதம், 10. 2 - 2.

" சலமிலன். அப்பர், 4. 11 - 6.

" இரப்பவர்க். " 4. 38 - 10.

" கேட்டாரும். 8. சுட்டறுத்தல், 38.

" அறத்திற்கே. திருக்குறள், 79.

தன்னுணர. சிவஞானபோதம், 12. 3 - 1.