(ப. இ.) நனவின் நனவு என்று சொல்லப்படும் நிலையில் திரோதாயி தொழிற்படுத்தும். திரோதாயி நடப்பாற்றல். இதுவே மறைப்பாற்றல். நனவினிடத்து நிகழும் கனவில் தூமாயைத் தொடர்பினராவர். நனவின் உறக்கத்துக் கன்மத் தொடர்பினராவர். நனவின் பேருறக்கத்துத் தூவாமாயைத் தொழிலினராவர். (அ. சி.) சகலம் - கருவி. கரணங்களுடன் கூடி இருக்கும் அவசரம். (1) 2129. மாயை எழுப்புங் கலாதியை மற்றதின் நேய விராகாதி ஏய்ந்த துரியத்துத் தோயுஞ் சுழுனை கனாநனா வுந்துன்னி ஆயின னந்தச் சகலத்து ளானே. (ப. இ.) தூவாமாயையானது உயிர்ப்படங்கலாகிய துரியாதீத நிலையில் உழைப்புக் கருவியாகிய கலாதியுடன் அடங்கிநிற்கும். பேருறக்கத்தின்கண் விழைவுக் கருவியாகிய அராகம் முனைக்கும் உறக்கமாகிய சுழுனையின்கண் உணர்வுக்கருவியாகிய வித்தை முனைத்துக் கூடும். கனவுநிலையில் உழைப்பு முனைத்துக்கூடி உடல் மெய்யாகிய மூலப் பகுதிக் கருவிகள் இருபத்தைந்துடன் தொழிற்படும். நனவுநிலையுடன் எல்லாக் கருவிகளுமாகிய முப்பத்தைந்து கருவிகளுடன் தொழிற்படும். (2) 2130. மேவிய அந்தகன் விழிகட் குருடனா மாவயின் முன்னடி காணு மதுகண்டு மேவுந் தடிகொண்டு 1சொல்லும் விழிபெற மூவயி னான்மா முயலுங் 2கருமமே. (ப. இ.) ஆணவமலத்தைப் பொருந்தி அறியாமை வயப்பட்டு அறிவுக்கண் ணிழந்திருந்த அகக்கண் குருடன் பார்க்கும் முகக்கண் ணில்லாத குருடனோடு ஒப்பன். அவ்விடத்து அருளுடையான் ஒருவனால் ஒருகோல் கொடுக்கப்படும். அதுவே அவ்விடத்துச் செய்யத் தக்கதாம். அதுவே அக் குருடனது விழைவாகிய பற்றுக்கோடுமாம். குருடனுக்குக் கோல் வேண்டுமென்னும் எண்ணம் கோலைப் பெறுவதன் முன் உறுவதற்கில்லை. ஆனால் நடக்கவேண்டுமென்னும் அடக்கமுடியாத ஆசையுறுவது இயல்பு. அதற்கு வேண்டும் துணைப்பொருள்களைக் கூட்டி நல்குவது அவனுடைய விளக்கமில்லாத தெளிவில் வேட்கையினை நிரப்புவதேயாகும். விழியோடு ஒத்துச் சொல்லப்படும் தடியினைக் கொண்டு பொருந்தும். அதுபோல் ஒருமலமுடையார், இருமலமுடையார், மும்மலமுடையார் ஆகிய முத்திறத்தார்மாட்டும் பண்டே ஒட்டியுள்ள ஆணவக்குருடு நீங்குதற்குத் துணையாக மாயாகாரிய உடம்பாகிய கோலினைச் சிவபெருமான் படைத்துக் கொடுத்து அருளுகின்றனன். இவ் வுடம்பு பெற்றதும் முத்திறத்துயிர்களும் நத்தும் கருமங்களிலும் முயலும். கண்ணிழந்து கண்ணையே வேண்டிய நம்பியாரூரர்க்குச்
(பாடம்) 1. செல்லும். 2. பின்னொருநா. 12. ஏயர்கோன் கலிக்காமர், 274. " மான்றிகழும். நம்பியாரூரர், 7. 89 - 10.
|