(ப. இ.) நிலம் யாங்கணும் பரந்தும், நீர் அதனிற் சுருங்கியும் இருப்பதால் இத்தகைய அடைகொடுத்தருளினர். நிலம், நீர், அரத்த வண்ணமாகிய தீ, எங்கணும் நிறைந்த காற்று, யாவற்றிற்கும் இடங்கொடுக்கும் வானம், ஞாயிறு, திங்கள் ஆகிய காரியப் பொருள்கள் ஏழனையும் படைத்தருள்வது ஆதிசத்தியாகிய நடப்பாற்றலாகும். அப் படைப்பினை அவ்வாற்றல் புரிகின்றதென்னும் உண்மையினைச் சுட்டத் 'தரந்த' என்றருளினர். தரு + அந்த என்ற சொல் தரந்த என்றாயிற்று. தரு - தரப்படுகின்ற. அந்த முன்னோதப்பட்ட அந்த உலகங்கள். அவ்வுலகங்களைப் படைத்தருளும் அந்த அறிவுப் பெருவெளியாகிய விசும்பினைத் தாங்கி நின்றருள்பவன் சிவபெருமான் ஆவன். அவனை யறியும் திருநெறி அரனெறியாகும். (அ. சி.) அரந்த அரன் - சிவந்த நிறமுள்ள அரன், தரந்த - தரு + அந்த, உற்பத்தி செய்வதான அந்த. (7) 2420. சத்தின் நிலையினில் தானான சத்தியுந் தற்பரை யாய்நிற்குந் தானாம் பரற்குடல் உய்த்தகு மிச்சையில் ஞானாதி பேதமாய் நித்த நடத்து நடிக்குமா 1நேயத்தே. (ப. இ.) சிவசத்து என்று சொல்லப்படும் மெய்ப்பொருளாம் சத்தின்நிலையினில் தானாக விளங்கும் சத்தியும், அச் சிவன் பரன் என நிற்கும் நிலையில் அம்மையும் பரை என நிற்பள். அவள் பரனாகிய சிவபெருமானுக்கு உடலாக நிற்பள். உலகங்களைப் படைத்து உயிர்களை உய்த்து உடனாயிருந்து செலுத்துமுறையில் தன் அன்பாற்றலகிய இச்சையினால், அதி ஆற்றல், அறிவாற்றல், தொழிலாற்றல் விழைவாற்றலாக வெளிப்படைப் பெயர்பெற்று நாடொறும் திருவருட்டொழில் ஐந்தினையும் சீர்பெற நடத்தியருள்வள். அஃது அவளுக்கோர் திருவிளையாடலாககும். இத் திருவளையாட்டுச் சிவபெருமான் திருவுள்ளத்தை இடனாகக்கொண்டு இயற்றப்பெறும். (அ. சி.) தற்......பரற்கு - பரை என்னும் சத்தியுடன் சேர்ந்த பரன், உடல் உய்த்தகும் - சரீரம் படைத்தலுக்கு உரிய. இச்சையின் ஞானாதி - ஆதிசத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி, ஞானசத்தி முதலிய சத்திகளாய். மாநேயத்தே - பெருமையுள்ள சிவத்தினிடத்திலே. (8) 2421. மேலொடு கீழ்ப்பக்க மெய்வாய்கண் ணாசிகள் பாலிய விந்து பரையுட் பரையாகக் கோலிய நான்கவை ஞானங் கொணர்விந்து சீலமி லாவணுச் செய்திய தாகுமே.2 (ப. இ.) திருவருள் ஆருயிரை அகலாது நின்றுகாத்தருளுதற் பொருட்டு மேல், கீழ், பக்கம், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
1. சத்திதன். சிவஞானிசித்தியார், 1. 3 - 3. " ஒருவனே." 1. 3 - 2. " சத்திதான்." 1. 3 - 2. 2. பால்நினைந். 8. பிடித்தபத்து, 9.
|