மூன்று கண்களுடைய சிவம். கொடியும், படையும் - நினைப்பும் மறப்பும். கோட்சரன் ஐ ஐந்து - குற்றம் பொருந்திய ஞானேந்திரியம் ஐந்து. கன்மேந்திரியம் ஐந்து. மடியும் - கெடும். வலம்புரி - வெற்றிநாதமாகிய சங்கொலி. (51) 2877. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரந் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற 1வாறன்றே. (ப. இ.) பதுங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன. தென் + திக்கு + இடந்த எனப்பிரித்து நன்றாக எல்லாப் புலங்களிலும் இடம் கொண்டிருந்தன என்றலும் ஒன்று. இப் பொருட்கு இடத்த என்பது மெலிந்து நின்றதெனக் கொள்க. சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும். இருண்மலம் பன்றியாகவும் மருண்மலம் அன்னமாகவும் உருவகிக்கப்படும். இருண்மலம் ஆணவமலம். மருண்மலம் - மாயாமலம் இக்குறிப்பு முறைமே மாலும் அயனும்கொண்ட வடிவாற்புலனாம். (அ. சி.) குன்றியும் பாம்பும் - தோல்வியும் வெற்றியும். பசு - முசுவானரம்; அடக்கமும் அடங்காமையும். தென்றி . . . . . . . கூட்டத்து செறிந்த புன் மன எண்ணங்களில். குன் . . . . . . . . பின் - ஈடுபடாது சிவத்திடை மனதை நிறுத்தினால். பன்றி . . . . . வாறே - அஞ்ஞானத்தைப் போக்கலாம். (52) 2878. மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட் டோடின் மலர்தலுங் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினாற் கட்டுவிட் டார்க்கன்றிக் காணவொண் ணாதன்றே. (ப. இ.) திருவருளால் திருவடிப் பேரின்பம் சிற்றரும்பாய் எழுந்து ஒப்பில் பேரரும்பாய் மொட்டிக்கும். அம் மொட்டினைக் கட்டாகிய பற்றினைவிட்டு ஆருயிர் ஓடிச்சென்று உணர்வினிற் கைக்கொண்டால் அம் மொட்டுப் பேரின்ப மலராக மலரும். மலரவே அதனை நுகர்ந்து பேரின்பங் கொள்ளலுமாம். மருள் நிலையாகிய உலக வியல்பிற் பற்றினைச் செலுத்தி நின்றால் அம் மனையாகிய திருவடிப் பேறு எய்தாது பாழ்பட நோக்கும். திருவடிப் பேரின்பம் கட்டுவிட்டார்க்கே உணர்வினிற் கண்டு நுகரும் உண்மையாகும். ஏனையார்க்குக் காணவொண்ணாதென்க. பற்றுவிட்டு - பற்றினைச் செலுத்தி. கைவிட்டு எடுத்தான் என்பது போலாகும். அல்லது பற்று + இட்டு என்பது வகர உடம்படு மெய் பெற்றுப் பற்றுவிட்டு என்றாயிற்று எனலும் ஒன்று. 'உயிர்வரின்'
1. இரும்புமுகஞ். புறநானூறு, 309.
|