460
 

தேன் நிறைந்த மலர்சூடிய மனோன்மனிமங்கை என்னும் அம்மை ஆருயிர்கள் கற்கும் கல்வியும் அதன் பயனுமாய் நிற்பள். ஆயுழி - ஆராயுமிடத்து. யோகம் - கூடியிருக்கும் பயன்.

(அ. சி.) இது - சத்தியும் சிவமும் சேர்ந்த காட்சி.

(17)

1148. யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகந் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரந் தேரே.1

(ப. இ.) சிவனுடன் விட்டுப்பிரியாத திருவருளாற்றல் ஒளி விளங்கும் இருக்கையாகிய பீடமாகும். அவ்வாற்றலே திருவுருவின் திருமுகமாகும். அம் முகம் தென்முகம் நோக்கியதாகும். அவ்வாற்றலே வயிறாகும். அதுவே நடுவாகும். அவ்வாற்றலே திருவடியாகும். அத் திருவடியே உயர்வற உயர்ந்த சிறப்பாகும். உத்தரம் - உயர்வு. இதனை அறிவாயாக.

(18)

1149. தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற
வார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.2

(ப. இ.) திருவருளம்மை (சத்தி) பேரொளிப்பிழம்பாம் சிவத்தினுள் ஒடுங்கும். அதுவே பேரொடுக்கநிலை அந்நிலையில் மாயாகாரியங்களும் தம் முதற்காரணமாகிய மாயையின்கண் ஒடுங்கும். அம் மாயை திருவருள் ஆற்றலின்கண் ஒடுங்கும். இதுபோல் உலகத்தோற்றத்தின்கண் சிவத்தின் நின்றும் அருளாற்றல் வெளிப்படும். அது வெளிப்பட்டதும் மாயையின்கண் சொல்லுறுப்பாகத் தோன்றும் ஓசையும் ஒளியுமாகிய நாதவிந்துக்கள் அம்மையின் நினைவாற்றலால் தோன்றும். அவை தொழிற்படுமாறு, அழகிய வளையலணிந்த அம்மையும் அப்பனிடமாக நின்று முனைத்தெழுகின்றனள்.

(19)

1150. தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை
தானான வாறுமீ ரேழுஞ் சமகலை
தானான விந்து சகமே பரமெனுந்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

(ப. இ.) பரையாகிய திருவருள் மூலமுதலாகிய ஆறு நிலைக்களங்களும், அகத்தவமாகிய எட்டுயோக நிலைகளும் தனக்கு இடம் என்று கொண்டருள்வள். அதுபோல அறுவகை வழிகளும் பதினான்கு உலகங்களும் தானாகக் கலந்திருப்பள். கலைவடிவாகச் சமையப்பட்ட உலகிற்கு முதலாம் விந்துவும் தானாக நிற்பள். பரமனாகிய நாதமும் தானாம். இத்


1. தொல்லூழி. கலித்தொகை. 129.

" கண்ணி. புறநானூறு, கடவுள் வாழ்த்து.

" உருவருள். சிவஞானசித்தியார், 1. 2 - 27.

2. தோலுந். 8. திருக்கோத்தும்பி, 18.