733
 

ஒன்றுபட்டால் அருளில் அழுந்திய தூய உயிராகும். திருவருள் உடன் நின்று ஆக்கும் அத் தூய்மையின் உண்மையினை அறிவார் யார்? ஒருவரும் இலரென்பதாம்.

(அ. சி.) மனமும் மவுனம் - ஐம்புலன் ஒடுக்கம்.

(5)

1860. யோகத்தின் முத்திரை யோரட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

(ப. இ.) எண்பெரும் இருத்திகளாகிய சித்திகள் யோகமுத்திரை என்ப. ஒப்பில்லாத உண்மை உணர்வடையாளத்தை ஆராயுமிடத்துத் திருநான்மறையின்கண் வகுக்கப்பெற்ற முறையான் ஒழுகிக் கடவுளருளால் கைவரும் கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி முதலிய முத்திரைகளடங்கிய யோகமுத்திரையாகும்.

(அ. சி.) ஏகத்த - ஒப்பற்ற. ஆகத் தகுவேதம் - வேதம் கூறிய முத்தி அடைதற்குரிய.

(6)

1861. யோகியெண் சித்தி அருளொலி வாதனை
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி
யாகுநன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமுங் கண்டொன்றில் எய்திநின் றானே.

(ப. இ.) அகத் தவமாகிய யோகத்தால்பெறும் எண்சித்தி யுள்ளவன். திருவருள் உயிர்ப்பாகிய அருள் மூச்சுடைய வாதனாவன். போக நிலையிலுள்ளார் புத்திக்குமேல் உணரும் நன்னெறியின்கண் உளனாகுவர். இவையே உண்மையாகும். இதுவே மூலமுதல் ஆறு நிலைக்களங்களிலும் நின்றருள்பவன் சிவன் என்று துணியும் செம்மை கண்டு உடனாகக்கூடி எதிர் நிற்கும் பண்பாகும். எதிர் நிற்றல்: ஏற்றுக் கொள்ளுதல். வாதனை: செம்பைப் பொன்னாக்கும் செய்கை, இரசவாதனை.

(அ. சி.) ஏகமும் - முழுதும். ஒன்றில் - சிவத்தில்.

(7)

1862. துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்
அவாவறு மீரை வகையங்க மாறுந்
தவாவறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாவக மோடுன்ன னற்சுத்த சைவமே.

(ப. இ.) பன்னிருவகையான யோகவழி வன்மை வழியாகும். மென்மை வழி சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையாகும். அந் நன்னெறி நான்மையும் ஒவ்வொன்றும் நன்னான்காக விரியும். அங்ஙனம் வருவதால் பதினாறு வழியாகும். வேந்துறுப்புப் பத்தாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் குற்றம் ஆறும் பற்றற நீங்கிய நெஞ்சுடன் மேலோதிய வழிகளில்