1047
 

2559. மெய்த்தான் அகம்படி மேவிய நந்தியைக்
1கைத்தாழ்கொண் டாருந் திறந்தறி வாரில்லை
1பொய்த்தாழ் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்கு
1அத்தாழ் திறக்கில் அரும்பேற தாமன்றே.

(ப. இ.) என்றும் பொன்றா மெய்ம்மை சேர் சிவபெருமானின் திருவடித் தாளிணையைப் பேரன்பு வாய்ந்த உள்ளத்தின்கண் மேவியருளச் செய்தல் யாவர்க்கும் எளிது. அம் முறையில் அன்பருள்ளத்தில் தன் உண்மைத் தாளிணையை மேவியருளியவன் நந்தி. அத்தகைய திருவடியை நன்னெறி நான்மை (2550) நற்றவமாம் கைத்தாழ் கொண்டு ஆருந்திறந்தறிவாரில்லை. நிலையா அடிப்படைமேல் விளையும் பொருள்கள் சேர்ந்து நிறைந்துள்ளனவற்றை இடும்பை உடம்பு. அவ் வுடம்பின்கண் கொண்டுள்ள நிலையாப்பற்றை நீ விட்டகல்வாயாக. விட்டதும் திருவருள் பற்றுப் பெருகும். அதனால் அத்தாழ் திறக்கப்பெறும். பெறவே அதுவே கிடைத்தற்கரிய பெரும் பேறாகும்.

(அ. சி.) அகம்படி - உள்ளத்திலே கைத்தாள் - கையிலே தாளிருந்தும். கொண்டு - அதைக்கொண்டு. பொய்ந்தாள் இடும்பையை - பொய்யினது மூலம் வைக்கப்பட்டுள்ள உடலை. அத்தாழ் - சுழுமுனை வாயிலில் உள்ள தாள். திறக்கில் - திறந்தால்.

(10)

2560. உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானன்றே.

(ப. இ.) பிறப்பற்றுச் சிறப்புற்று உய்யும் வழி நன்னெறி நான்மையாகும். அந் நான்மையினுள்ளும் அறிவாகிய உணர்வு நெறியே சிறந்தது. அந் நெறியினால் சிவபெருமானை ஏத்துமின்கள். அதன் மேல் மெய்ப்பொருளாகிய அரனார் திருவடியிற்றலைக் கூடிப் பேரின்பம் நுகரும் மேனெறி ஆங்குண்டு. அத்தகைய பேறு பெற்றார் சிவனருள் உறுதிப்பாட்டுடன் பொய்ப்பற்று ஏதுமின்றி அகப் பொலிவொத்துப் புறத்தும் சிவப்பொலிவாகத் திகழ்வர். அவர்தம் அன்புறு நெஞ்சத்து ஐயனாகிய சிவபெருமானும் அங்கு வெளிப்பட்டு விரும்பி நின்றருளினன்.

(11)

2561. வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாது
அம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த 2லாகுமே.

(ப. இ.) நறுமண முதிர்தலொத்து எங்கும் செறிவாயுறும் திருவருள் மலரின்கண் கற்றவர்களுண்ணும் காழில் கனியாகிய சிவம்


(பாடம்)1. தாள்.

2. மெய்ம்மையாம். அப்பர், 4. 76 - 2.

" தெள்ளத். " 5. 91 - 10.

" கேடு. " " 56 - 9.