15. கல்லாமை 297. கல்லா தவருங் கருத்தறி காட்சியை வல்லா ரெனில்அருட் கண்ணான் மதித்துளோர்' கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங் கல்லாதார்1 இன்பங் காணுகி லாரே. (ப. இ.) எழுதப் படிக்கக் கல்லாதவரும் அருளால் அன்பு கொண்டு அறிவின்கண் அறிய வேண்டுமென்று முயன்றால் அவர்க்கு அறியப்படும் காட்சித் தன்மை உடையவன் சிவன். திருவடியுணர்வு கற்று வல்லாரெனில் அச் சிவனை அவன் திருவருளால் அறிவிற் கண்டு இன்புறுவர். அத் திருவடியுணர்வு அருளால் கல்லாதவர் அவ் வுண்மைச் சிவனை மேற்கொள்ளாது நிற்பர். அவர்கள் உலகியல் கற்றுளாராயினும் கல்லாதவரேயாவர். அவர்கள் திருவடியின்பங் காணாதவருமாவர். கருத்து - அறிவு. காட்சி - திருவருட் கண்ணால் காணப்படும் சிவன். அருட்கண் - மெய்யுணர்வுக்கண். (1) 298. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே.2 (ப. இ.) திருவருட் சிறப்புச்சேர் வல்லார்கள் எஞ்ஞான்றும் யாண்டும் இடையீடின்றித் திருவடியுணர்வு சேர்வர். அதனால் நன்னெறிக்கண் பொருந்தி நல்லாராய் வாழ்கின்றார். செந்நெறிக்கண் வாராத ஏனையார் மெய்யுணர்வு நூலாகிய ஞானநூல் பல என்பர். நம் இறையாகிய சிவபெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துளன். சிவனெறி கல்லாதவர் அவன் திருவடிச் சேர்வு கலவாதவராவர். அறிவுபல - அறிவு நூற்கள் பல. (அ. சி.) வழி ஒன்றி - ஞான நெறியிற் பொருந்தி. (2) 299. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள் எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினுங் கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. (ப. இ.) உலகும் உலகத்துப் பொருளும் உடலும் நில்லாத தன்மையினை உடையன. அவற்றை நிலையாக நிற்கும் என நெஞ்சத்துக்
1. உலகத்தோ. திருக்குறள், 140. 2. தூயானைச். அப்பர், 6, 50 - 4. 3. கல்லா நெஞ்சின். சம்பந்தர், 3. 41 - 3. " கல்லாதார். அப்பர், 6. 84. 8.
|