துயிர்க்கு யோகத்தைப் புரிதல் ஓரார்' என்னும் தமிழாகம விரிவாகிய சிவஞான சித்தியார் திருப்பாட்டான் உணர்க. நாழி - அளக்கும் கருவி; படி தாழ - தங்க. ஊழி - கற்பம். உடம்பில் அகத்தவ முயற்சியால் நெடுநாள் தங்கவல்லார் மதியமிழ்தப் பயிற்சியுடையாராவர். இவரைச் சசிவன்னர் எனக் கூறுவர். நாழிகையாக என்பதை, நாழி + கையாக என்று பிரித்து நாழி - படி, கையாக - அளக்கும் கருவியாக எனப்பொருள் கொள்க. (அ. சி.) ஊழி தரியாது - விதியை அடையாமல். (24) 855. தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே.1 (ப. இ.) குளிர்ந்த திங்களும், ஞாயிறும் உச்சி வழியாக நிலத்தே சென்று நிலைப்பின் உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று கால நிகழ்ச்சியையும் ஒருகாலத்து ஓரிடத்தே இருந்து கண்டு கொள்வர். நிறைமதி தோன்றிய நாளில் மதியமிழ்தம் விளையும். விளைந்தபின் அக் குளிர்ந்த மதியமிழ்தம் உடல்முழுவதும் நிறைவதற்குரிய அளவிற்கு எண்ணில்லை என்க. உச்சிசரி - உச்சித் தொளைவழி. உச்சி சநி என்பது உச்சரி என நின்றது செய்யுட்டிரிபு. வீழ்வு - நிறைவு. அளவிற்கு -, அணம் இன்றே - எண்ணில்லை. (அ. சி.) மண்மதி - உலகத்தாரால் மதிக்கப்பட்ட. (25) 856. வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந் தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும் மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. (ப. இ.) ஞாயிற்றின் விளக்கமிக்க கலை ஆறும், திங்களின் தேய்பிறைப்பக்கக் கலை ஆறும் உயிர்ப்புப் பன்னிரண்டு விரலளவு ஓடி விரிந்து உள்ளடங்குந் தன்மையை அறிந்தவர் நெடுநாள் வாழும் தன்மையை அறிவர். அல்லாதார் எவரும் அறியார். (26) 857. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே. (ப. இ.) உயிர்க்கு மதியமிழ்தம் கீழ்நோக்கிக் கழியுமானால் தேய்வு பக்கம் எனக் கூறுக. அகத்தவமுடையார்க்குக் காம வேட்கை இன்மையால் அவ்வமிழ்து (விந்து) போம் இடமெல்லாம் போகாது கட்டுப்படும். அவ்வாறு கட்டுப்படுவதற்கு மூலத்திடத்துத் தோன்றும் ஓ மொழி மறையினை இடையறாது புருவநடுவில் எண்ணுதல் வேண்டும். எண்ணு
1. அருந்தின்பத் சிவஞானசித்தியார், அளவை - 7.
|