591
 

பிரிப்பின்றி விரவிநிற்கின்றான். மக்கள் அவனை நினையாமையாகிய குற்றமும் அக் குற்றத்திற்குக் காரணமாகிய மலப்பிணிப்பும் தம்பால் உள்ளன என்பதனை யுணரார். அவனுடைய மெய்ம்மையான புகழைப் பாராட்டித் தொழார். நிலையாப் பொருள்களாகிய உலகு உடைமை உடல்களில் மயக்கம் கொண்டு அதனால் பித்தேறி என்றும் பிறந்திறந்து துன்புறுவர்.

(அ. சி.) கலதிகள் - வீணர்கள்.

(11)

1514. மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.

(ப. இ.) உண்மை தெளியாமையால் மயங்குகின்றவர்களும், அறிவு தெளிந்தவர்களும் இருவினைப் பயன்களை நுகர்ந்து உச்சித்துளைக்குகை அருகிலிருக்கும் திருவருளம்மையினைக் கூடி அவள் இயக்கும் இயக்கத்தின் வழியே செல்லப்பெறுவார்களானால் அவர்களுக்கு வினை முடிவும் பரவெளியும் அருட்கண்ணால் காட்டப்பெறும். காட்டப்பெறுதலாற் பிறப்பு இறப்புக் குறித்து ஒருசிறிதும் அவர் அஞ்சார். அவரே, நன்னெறியாகிய மேனெறியை எய்தியவர் ஆவர் முழைமுகப்பு ஆச்சி : உச்சித்துளையில் விளக்கும் திருவருளம்மை : ஆச்சி : அம்மை.

(அ. சி.) முயங்கு - அனுபவித்து. முழை முகப்பு ஆச்சி - குண்டலி சத்தி. ஈறு - வினை முடிவு.

(12)

1515. சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.1

(ப. இ.) முழுமுதற்சிவம் மாற்றம் மனம் கழியநின்ற மறையோனாதலின் தொலைவிலுள்ளோன். அவன் அருள் கண்ணால் காணும் தவமுடையார்க்கு உயிர்க்கு உயிராய் வெளிப்படுதலின் நெருக்கமாக உள்ளவனுமாவன். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆதலின் பிணியிலன். அவன் திருப்பெயர் நந்தி இயல்பாகவே தூய்மையாகிய வாலறிவினன். அவனை ஒருமனப்பட்ட நெஞ்சினராய் அசையாது நின்று இடையறாது நோக்கவல்லார்க்குப் பிறப்பறும்; சிறப்புறும். திருவடிப் பேரின்பம் எய்தும். பிறப்பு இறப்புக்கு உட்பட்டு உடம்பால் விளையும் துன்பநிலையினை அறியாது அதுவே இன்பமென மயங்குவோர், மாயவன் மயக்கிற்பட்ட மருண்ட மாந்தராவர். சிறப்பு - திருவடிப்பேறு.

(13)

1516. வழியிரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடநில் லாரே.


1.தாயி. அப்பர்: 5. 100 - 9.