743
 

ஒற்றைத்தாளர், 4. எச்சத் தலைவர், 5. விடையூர்தி, 6. நந்திவரத்தர், 7. கூத்தப்பெருமானார், 8. கொடுஞ்சினத்தர், 9. பெண்ணொரு கூற்றண்ணலார், 10. ஆலமர் செல்வர், 11. திருநீலகண்டர், 12. சலந்தரனொடுக்கி, 13. ஆழியருள்வோன், 14. அந்தகாசுரன் ஒடுக்கி, 15. திரிபுரரொடுக்கி, 16. கங்கை தாங்கி, 17. உற்றுழியுதவி, 18. சிவச்சுடர்க்கொழுந்து, 19. மீனொடுக்கி, 20. ஆமையொடுக்கி, 21. பன்றியொடுக்கி, 22. ஆளரியொடுக்கி, 23. முதுகெலும்புதூக்கி, 24. காலவைரவர், 25. பலிப்பகவன் என்பன. நாதத்தின் வகையாகிய விந்து, பரவிந்து, நாதம், பரநாதம் என்னும் நான்கும் தோன்றின. நாத வகை உட்கருவிகள் இருபத்துநான்கும் தோன்றும். இவற்றின் விரிவாகிய முப்பத்தாறு மெய்களும் தோன்றும். மெய் - தத்துவம்.

(அ. சி.) மற்று இவை ஈரிரண்டு - விந்து, பரவிந்து, நாதம், பரநாதம். விந்துபேதம் - 25. நாதபேதம் - 24. இவைகள் விந்து, நாத தத்துவங்களின் உண்ணிலைக் கருவிகள்.

(2)

1888. வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோ டேமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கு மேவா விளங்குமே.

(ப. இ.) பரவிந்துவில் தோன்றும் மாமாயை மேலோதிய இருபத்தைந்து சிவவடிவங்களையும் தந்திடும். மேலும் வாகேசி தற்பரை செலுத்துங்குடிலை, இன்புறுத்துங் குண்டலி என்னும் விந்துவில் பொருந்தித் தோன்றும்.

(அ. சி.) ஏமுறு - இன்பம் பொருந்திய. மேவா - மேவி.

(13)

1889. விளங்கு 1நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத் துளவிந்து
களங்கமில் நாதாந்தங் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமு 2மாமே.

(ப. இ.) மேலும் நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல், ஆகிய ஐங்கலைகளும் தூமாயையின்கண்ணின்று தோன்றும். இத் தூமாயையின் நின்றே அகர முதலும் உளங்கொள் உகரமும், மகரமும், விந்துவும், நாதமும் ஆகிய ஐந்து எழுத்துக்களும் தோன்றும். இவை முறையே எழுச்சி, இறுப்பு, மனம், எண்ணம், ஆள், என்னும் ஐந்து கருவிகளையும் செலுத்துங் கடவுளர் ஐவர்க்கும் கைக் கருவியாகநிற்கும். இக் கடவுளர் ஐவரும் முறையே அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் எனப்படுவர்.

(அ. சி.) நிவிர்த்தாதி - நிவிர்த்திகலை முதலியன. கண்ணினுள் - கருத்தினுள். மனாதி - அந்தக்கரணங்கள்.

(4)


1. நிகழ்ந்திடும். சிவஞானசித்தியார், 1. 1 - 24.

2. அகார. சிவஞானபோதம், 4. 1 - 3.