822
 

சேர்ந்த காடுகளிலோ, குகைகளிலோ. ஊறிய - செய்த. நரை உருவம் - முதுமைப்பருவம்.

(17)

2063. வரவறி வானை மயங்கிருண் ஞாலத்து
இரவறி வானை யெழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் னொருதெய்வ 1மென்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.

(ப. இ.) இந் நிலவுலகத்துத் தொன்மையே புல்லிய இருளால் வரும் இருவினைக்கீடாகப் பிறப்பு நேரும் அதுபோல் கொண்டவினை நுகர்வின்கண் அப் பிறப்பு அறும். வரவறிவானை என்பதனால் பிறப்பும் இரவறிவானை என்பதனால் இறப்பும் பெறுமாறுணர்க. இத்தகைய நல்லுணர்வு எழுமாறு மங்காது ஓங்கி எழும் சுடர்ச்சோதியாகிய சிவபெருமானைச் செந்தமிழ்த் திருமுறை, திருமுறைவழியாக வுணர்ந்தவர் தமிழகச் சான்றவர். அவர்கள் உணர்ந்ததோடமையாது 'நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பதற்கிணங்க உணர்த்தி உரைப்பாருமாயினர் அவரே அரவறிவார். அரவு - சொல். அது கருவியாகு பெயராய்த் தொன்மை நன்மைத் தமிழ் நூல்களை உணர்த்திற்று. இத்தகைய அருஞ்சைவர் முன் அவர் கூறும் ஒரு தெய்வமே உண்மையென்று உணர்ந்து அத் தெய்வமாம் சிவபெருமான் திருவடியில் கலந்து இன்புறும் நற்பேறில்லாதவர் அயன் மொழிமயக்கால் பல தெய்வப்பளகு கூறிப் பழிப்படுகின்றனர். அவர்கள் இன்னும் பிறக்க மேல்வினை வைத்தவராவர். பளகு - குற்றம்.

(அ. சி.) வரவு - தோற்றம். இரவு - முடிவு. அரவு அறிவார் - சொல்லத் தெரிவார். விரவு - கலத்தல்.

(18)


30. இதோபதேசம்
(இன்குருமொழி)

2064. மறந்தொழி மண்மிசை மன்னாப் 2பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

(ப. இ.) மன்னா வுலகமாகிய இம் மண்ணின்மீதுள்ள நிலையுதலில்லாத பிறவியை மறந்தொழியுங்கள் மன்னா - நிலையா. இறந்தொழியும் காலத்தும் சிவபெருமானைத் திருவைந்தெழுத்தால் வழுத்தி நினைக்கும் அருந்தவத்தை இப்பொழுதே மேற்கொள்ளுங்கள். அங்ஙனம் கொண்டால் வாழுங்காலத்தும் மாளுங்காலத்தும் சிவனினைவில்லார்க்கு ஏற்படும் படபடப்பையும் சுழன்று திரியும் துன்பத்தினையும்


1. அயனொடு. அப்பர், 4. 101 - 9.

2. நடுவிலாக். " 4. 76 - 10.

" தீத்தொழி. " " 96 - 4.

" வரையார். " 6. 47 - 3.