(ப. இ.) தாம் வாழ்ந்ததாகிய இவ்வூரகத்துக் குழலினும் யாழினும் மிக்க இனிமை வாய்ந்த சொல்லினையுடைய தம்மக்களும், வருந்தித் தேடிய பெரும் பொருளும், திருந்திய மனைவியும் அழுது வருந்தியொழிய விமானமாகக் காட்டுச் சிவிகையினை ஏறி ஊர்ப் பொதுவாயுள்ள புறங்காடு எனப்படும் சுடுகாடு நோக்கி இறந்தார் புறப்பட்டனர் ஊரவரும் சுடுகாடாகிய அவ்வூர் சென்று காட்டுச் சிவிகையாகிய பாடையினை இறக்கிவைத்து நீங்கினர். (13) 200. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர் எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே. (ப. இ.) ஏனையார் உடம்பினை உலகத்தே வைத்துவிட்டு நீங்கிய நிலைமையை மாந்தர் கண் கூடாகக் கண்டிருந்தும், தம் உடம்பு மட்டும் நிலைகெடாது என நாடுவர். அங்ஙனம் அவர்களால் நாடப்படும் அவ்வுடம்பாகிய அரும்பொருள் (காலனால்) பறிக்கப்பட்டதாய் மற்றையார் உடம்பு போன்று அழியும். தாங்கள் நிலைக்குமென்று கருதிய உடம்பு எச்சமாகிய மேன்மை நீங்க நின்று அவர்கள் பிறந்து இறந்து இளைப்பர். பிச்சு - பிய்த்து; வௌவி - அபகரித்து. பிச்சு என்பது பிய்த்து என்பதன் போலி. எச்சு - மேன்மை. (அ. சி.) அச்சு அகலாதென - உயிர் விரைவில் நீங்காதென்று. (14) 201. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலேஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. (ப. இ.) உடம்புவிட்டு நீங்கிய உயிரினைச் சார்ந்த சுற்றத்தார் அலறியழுது கூடுவர். அவரும், உரிய பெண்டும், ஏனைமக்களும் ஊர்ப்பொதுவாகிய வாய்க்காலிற் சென்று செய்யும் சடங்கினைச் செய்து தீர்த்தநீர் கொண்டுவந்து முழுக்காட்டுவர். பின்பு அவ்வுடம்பினை எரியின்கண் இடுவதற்கு உண்டாகும் அச்ச முதலியவற்றை அகற்றி விறகடுக்கித் தீ மூட்டுவர். தீ மூட்டியபின் நீர்நிலையிற் சென்று மூழ்குவர். சிறிதும் முறைமையில்லாதவராவர். நீதி - முறைமை. (அ. சி.) ஊர்த்துறைக்கால் - ஊர்ப் பொதுவாய்க்கால். (15) 202. வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே. (ப. இ.) மாயா காரியமாகிய குடமும் உடலும் முறையே குயவனாலும் இறைவனாலும் செய்யப்படுவன. ஆனால் குடமுடைந்தால்
|