ஆவிக்காட்சியாவது சிவபெருமானின் திருவடியுணர்விற் கூடுவதாகும். அவ்வுணர்வின்கண் ஒடுங்கி நிற்பது உபசாந்தமாகும். ஒடுங்கி நிற்பது - அடங்கு நிறைவு ; வியாத்தி. (அ. சி.) ஆத்திம சுத்தி - அந்தச்சுரணத் தூய்மை. புரி - பரமானந்தம். பரங்காட்சி - ஆன்மதரிசனம். உடனுற்று - சிவத்துடன் கூடி. (3) 2469. ஆறா றமைந்தாண வத்தையுள் நீக்குதற் பேறான தன்னை யறிதற்பின் றீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதங் குருபரன் பேறாத வியாத்தம் பிறழுப 1சாந்தமே. (ப. இ.) அருஞ் சைவர் மெய் (2139) முப்பத்தாறு இம் முப்பத் தாறும் மலத்தேய்வின் பொருட்டுச் செய்யப்படும் நலத்தொண்டினுக்குத் துணைக்கருவியாகச் செம்பொருளால் நம்பால் அளித்தருளப்பட்ட இரவல் பொருளாகும். இவ்வுண்மையினை யறிந்து அதனைப் பேணி ஒழுகுவதே, தத்துவசுத்தி என்னும் மெய்த்தூய்மையாகும். அதன் வாயிலாக ஆணவத்தினின்றும் அசுத்தால் நீங்குதல் ஆணவவல்லிருள் நீக்கமாகிய மலத் தூய்மையாகும். திருவடிப் பேற்றுக்கு உரித்தான ஆவிப்பேறு என அழைக்கப்பெறும். அத்தகைய தன்னை அருளால் அருளின்கண் அடங்கி நிற்கும். நிலையினுணர்தல் மும்மலத் தூய்மை யாகும். மும்மலம் ஒழிதலே மும்மலசுத்தி. கூறவொண்ணாத நனவின் அப்பாலாகிய சாக்கிராதீதம் சிவகுருவான் திருவடிப்பேறாகும். அத் திருவடியுன்கண் அடங்கும் நிறைவாய் நிற்றல் ஒளிமிக்க ஒடுக்கமாகிய உபசாந்தமாகும். அடங்கு நிறைவு - வியாத்தம். அசுத்தல் - மனத்தால். (அ. சி.) தீர்சுத்தி - பாசம் ஒழிதலாகிய சுத்தி. பிறழ் - விளங்குகின்ற. (4) 2470. வாய்ந்த வுபசாந்த வாதனை யுள்ளப்போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்ததில் தீருகை யானதீ ரைந்துமே. (ப. இ.) திருவுருள் நினைவால் வாய்ந்த 1. ஒழிவில் ஒடுக்கம் 2. பசையறல் 3. திருவருள் தினைவிற் சேறல் 4. பொருந்தும் சிவமாதல் 5. சிவ இன்பம் 6. அதில் தோய்தல் 7. தோய்வு நினைவகறல் 8. மேன்மைநிலை 9. இன்பத்தழுந்தல் 10. அழுந்து நினைவகறல் ஆகிய பத்தும் நனவினப்பால் நலப்பாடாகும். நினைவறல் என்பது ஆருயிர் ஒன்றைக் கண்டும் கேட்டும் உளம்கொள்ளும். கொண்டதன்பால் வேட்கையுறும். வேட்கையுற்றுநாடி நண்ணும் இதுகாறும் அவ்வுயிர் அப் பொருட்கு வேறாக நிற்கின்றது. அதனால் அப் பொருளின் நினைவு அவ்வுயிரைவிட்டு அகவாதிருக்கும். நண்ணியதும் அப் பொருளின்கண் தோயும். தோய்ந்ததும் அந்நினைவு நானாக அகன்றுவிடும்.
1. சாக்கிரத்தே. சிவஞானசித்தியார், 8. 2 - 25. “ மானுடப். சிவஞானசித்தியார், 2. 4 - 20.
|