1051
 

(ப. இ.) உள்ளம், உரை, உடல் என்னும் முன்றும் மனம், வாக்கு, காயம் எனப்படும், இம் மூன்றும் சிவனினைவின்றித் துய்ப்பினும் தொழிற்படினும் அவர் தமக்குப் பலவினையாகும். பவம் - பிறப்பு. பாவப் பயனாகிய பிறப்புப் பவம் என்றாயிற்று. அதனால் வல்வினை மூளும் என்றருளினர். அம் மூன்றும் சிவனினைவுடன் அவனோடியைந்து தற்செயலற்றுத் தலைவன் செயலாய் நேருற நிற்கில் அவ் வினைகள் வெற்பிற்றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்பனிக்கெடு மாறது போல'க் கேடெய்தும் நேருற நிற்றல் - துணையாய் நிற்றல், உள்ளமும் உரையும் பிறப்புக்கு வழியாகாதபடி அவற்றின் முனைப்பைக் கெடுத்தவர் அகத்தவப் பயிற்சியினால் தன்முனைப்பை மாற்றி அருள் முனைப்பாக ஆற்றுவர். அவர் திருவடியுணர்வினர் என்று செப்பப்பெறும் தத்துவ ஞானியாவர். மாற்றியாற்றற்குத் 'தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா' என்றலும் ஒன்று கெட்டவர் என்பது சினைவினை முதன் மேல் நின்றது.

(அ. சி.) நேர் நிற்கில் - நன்னேறியில் நின்றால். மன்னா - பொருந்தா. வாதனை தன்னால் - அட்டாங்க யோகத்தால். தனைமாற்றி ஆற்ற - தற்போதத்தை அழித்து ஒழிக்க.

(3)

2567. நிற்ற லிருத்தல் கிடத்தல் 1நடையோடல்
பெற்றவக் காலுந் திருவருள் பேராமற்
சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவே
உற்ற பிறப்பற் றொளிர்ஞான நிட்டையே.

(ப. இ.) நிற்றலும் இருத்தலும், கிடத்தலும் நடத்தலும், ஓடலும் செய்யும் பொழுது திருவருள் நினைவு நீங்காதிருத்தல் வேண்டும் 'சாற்றப்படும் இயற்கை மெய்யுணர்வு அங்ஙனம் நீங்காதார்க்குத் தந்தருளினன். அங்ஙனம் தந்தருளிய பேரொடுக்கப் பெருமான் அந்தம் என்று அழைக்கப்படுவன். அவ் வுயிர் அந்தமாகிய தன்பால் தங்கவே அங்ஙனம் அருளினன். அதனால் அவ் வுயிர் பிறப்பற்று விளக்கமிக்க ஞான நிட்டையினை எய்தும். சாற்றியல் என்பது சற்றியல் எனக் குறைந்து நின்றது.

(4)


30. அவாவறுத்தல்

2568. வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

(ப. இ.) புகழ்ந்து பேசப் பெறும் வாசியாகிய உயிர்ப்பும், ஊசியாகிய நடுநாடியும் அவற்றின் தன்மைகளும் பயனும் பயிற்சியும் பேசிப் பயன் இல்லை. பிதற்றியும் பயனில்லை. இவை, தாமே வாழவேண்டுமென்னும் ஆசையும், தாமுயரத் தம்மையெல்லாம் தொழ அவை தாழ


1. நின்றாலும். 12. பத்தராய்ப் பணிவார், 7.