(ப. இ.) திருவருள் ஆருயிர்களுடன் கலந்துநிற்கும் நிலைமையினைக் காலத்துடன் பார்த்துணர்தல் வேண்டும். உணரவே பொறி புலன்களுடன் கலந்துழலும் தன்மை கைவிடும். கைவிடவே கடை வாசலைக்கட்டி இடைவாசல்நோக்கி இனிதிருக்கச் சிவபெருமான் உள்ளத்துள் கலந்து வெளிப்பட்டருள்வன். அருளவே சிவத்துடன் கலந்தவுயிர் அவ் வுடற்கண் நெடுநாள் நிற்கும். (அ. சி.) கலந்த உயிர் - கடைவாசலைக் கட்டி, இடைவாசல் நோக்கி, இனிய உள்ளத்திலிருக்கும் சிவத்துடன் கலந்த உயிர். காலமும் நிற்கும் - ஆயுள் நிலைத்து நிற்கும். (5)573. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையு மாமே.1 (ப. இ.) மேன்மை ஞானமாகிய வாய்வாளாமை என்று சொல்லப்படும் மோனநிலையுடையார் வாய்திறவாதவராவர். அத்தகையார் தூயவுள்ளத்துச் சிவபெருமான் என்னும் விலைவரம்பில்லா உலைவில் செம்மணி ஒன்றுண்டு. செம்மணி உவமையாகு பெயராகச் சிவனைக் குறிக்கும் வாய்திறத்தலாகிய உலகிடை உழல்வார் உயிர்ப்பினை வெளியிட்டுக் கழிப்பர். பேச்சற்றார்க்கு மூச்சுஅறா ஆகலின் சிவபெருமானை அறிவின் கண்ணமைத்து இன்பத்தை எழுப்புவர். செம்மணி அடங்கியுள்ள கோயாகிய மணிப்பேழையினைத் திறத்தல்வேண்டும். அப் பயிற்சியின் நின்று திறவாது ஒழியின், பிறவிப்பயன் எய்தாத கோழையராவர். மாடு - செம்மணியொப்பாம் சிவபெருமான். வளியிட்டுப் பாய்ச்சுவர் - மூச்சையடக்காது சிவபெருமானை மறப்பர். மதியிட்டு மூட்டுவர் - திருவடியுணர்வு கொண்டு சிவனை நினைவர். கோய் - அணிகலச் செம்புமாம். இது நடுநாடி எனவும் கொள்ளப்படும். திறவாவிடில் - சிவனை அகத்தே உணராவிடில். கோழை - பிறவிபெறுங் குற்றத்தோன். வாள் - சொல். (அ. சி.) வாய்திறவாதார் - மோன நிலையில் உள்ளவர். மாடு - பெருமை. கோய் - பரணி; (பரணி மும்மீன் அடுப்புப்போல) மூன்று கண்கள் இரு கண்களுடன் ஞானக்கண்ணும் சேர்ந்தது. ஞானக்கண் திறந்ததற்கு அடையாளம் ஆனந்தக்கண்ணீர். (6) 574. வாழலு மாம்பல காலும் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில் ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியதோர் பள்ளி அறையே.2 (ப. இ.) உள்ளத்தினின்றும் புறப்பட்டு ஆங்காரத்தாற் செலுத்தப்படும் உயிர்ப்பைப் புறம்போகலொட்டாது தடுத்தல்வேண்டும். அங்ஙனம்
1. என்னி. அப்பர், 5. 21 - 1. " விள்ளத்தான் " 4. 76 - 7. 2. கால்கொடுத். " 4. 32 - 4. " கருமுதற். 11. பட்டினத்துப் பிள்ளையர், திருக்கழு. 4.
|