நாட்டம் மறையும். ஒடுக்கமாகிய மறைவே இயல்பாகவுள்ள உருவமாம். உடம்பினைநாடின் மீண்டும் உடல் உருவெடுக்கும் பிறப்புண்டாகும். ஆருயிரின் அறிவொளித் தன்மையை அறியின் சிவவுருவாம் ஒளியும் வெளியாகும். அருளொளியாம் ஆருயிர் சிவபெருமான் திருவடிக்கண் பேரன்பு பூண்டு உள்ளம் உருகித் தள்ளரிய மெய்ப்பத்தியினோடு நிற்றல் வேண்டும். அங்ஙனநிற்பின் உடனாகவிருக்கும். சிவபெருமான் வெளிப்பட்டு இன்புறுத்தியருள்வன். (அ. சி.) ஒளியை-ஒளி மயமான ஆன்மாவை; உருவும் ஒளியும்-உடம்பு மறையும் [(Vide) மரத்தை மறைத்தது மாமத யானை] ஒளியும் உருவம் அறிவில்-மறைந்த போகும் உடம்பை அறிந்தால். உருவாம்-பிறப்பாம் ஒளியின் உருவம் அறியில்-ஆன்ம தரிசனம் செய்தால். ஒளியே-சிவ ஒளி உதயமாகும். ஒளியும் உருக - ஒளி மயமான ஆன்மாவின் பாசம் களைய. (1) 2633. புகலெளி தாகும் புவனங்கள் எட்டும் அகலொளி தாயிரு ளாசற வீசும் பகலொளி செய்தது மத்தா மரையிலே இகலொளி செய்தெம் பிரானிருந் தானே. (ப. இ.) திருவருளால் சிவஒளி கைவந்த அறிவொளிகண்ட ஆருயிர்க்குப் புவனங்கள் அனைத்தினுமுள்ள நிகழ்ச்சிகளை உள்ளவாறுணர்ந்து உரைத்தல் எளிதாகும் அறிவின் அறிவாம் செறிவொளி எங்கணும் பரந்துநிற்கும். அவ்வொளி எங்கும்நிறைந்த சிவவொளியாகும். அவ்வொளிக்கதிர் வீசவே மலமுதலிய குற்றங்கள் தேய்ந்து மாய்ந்தகலும். ஆருயிரின் நெஞ்சத் தாமரைக்கண் ஞாயிற்றொளியின் மிக்கதாயுள்ள பேரொளி காணப்படும். அத் திருவொளி எம்பெருமானாகிய சிவபெருமானின் செஞ்சுடர் ஒளியாகும். அதனால் அவ்வொளி ஞாயிற்றின் ஒளியின் மாறுபட்ட பேரொளியாம். அதனால் இகலொளி என ஓதினர். அத்தகைய செவ்வொளியருளிச் சிவபெருமான் இருந்தருளினன். (அ. சி.) அகலொளி தாய் - அகண்ட ஒளி பரவி. பகல் ஒளி - சூரிய ஒளி. அத் தாமரை - அந்த உள்ளக் கமலத்தில். இகலொளி - சூரிய ஒளிக்கு மாறுபட்ட ஒளி. (2) 2634. விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே. (ப. இ.) எரிபொருளைப் பற்றிநின்று யாண்டும் ஒளிதரும் தீயும், விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும், அக்கதிரின் துணையால் ஒளிதரும் திங்களும், இயற்கை உண்மை அறிவு இன்பப்பிழம்பாய் ஒளிரும் சிவபெருமான் ஒளிகொடுத்தருளினமையால் உலகினுக்குக் காலவரையறைக்கு உட்பட்டு ஒளிதந்துகொண்டிருக்கின்றன. வழங்கத் தவா வளத்ததாய் உள்ள பேரொளி வண்ணனாம் சிவபெருமான் படைத்தருளியதே அம்மூன்று ஒளிமண்டிலங்களும், அவற்றிற்கு இயற்கை ஒளி இல்லாமை ஒரு
|