2637. மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய வாறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறொளி யொத்தது தானன்றே. (ப. இ.) தொன்மைத் தூவெள்ளொளி சிவபெருமான். அவ்வெள்ளொளியினின்று உலகினை இயக்க ஐம்பேரொளியின் மேலதாகக் காணப்படும் செவ்வொளி விளக்கமுற்றது. வெள்ளொளி அறிவுப் பண்பாகும். செவ்வொளி ஆற்றற் பண்பாகும். புகழ்ந்து சொல்லப்படும் அறிவு பரந்த பே.ரொளி மெய்யுணர்வுப் பண்பாகும். பரத்தொளி அருள்நிறைந்த ஆருயிரொளியாகும். சிவபெருமானின் திருவடிக்கு நெருக்கமாகக் காணப்படும் நெறி நன்னெறி. அந்நெறியின் ஒளி ஆறொளியாகும். திருவைந்தெழுத்தெனப்படும் தூமொழி மறையொளியாகும். இவ்வாறும் ஒத்து நிறைந்து விளங்குவது சிவஒளி. (அ. சி.) மின்னிய தூவொளி-படைப்புத் துவக்கத்தில் நின்மல சிவத்தினின்றும் தோன்றிய வெள் ஒளி. மேதக்க செவ்வொளி-அவ்வெள் ஒளியினின்றும் தோன்றிய ஐந்து வர்ண அளிகளில் மேலான பராசத்தியின் சிவந்த ஒளி. பரத்தொளியுடன் துன்னிய பரை-ஆதி இச்சை-ஞானம்-கிரியை ஆகிய ஐந்து வர்ண ஒளியுடன் ஆறு ஒளி. (6) 2638. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி யீசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி யூனிடை நின்றுய்ர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. (ப. இ.) சிவபெருமான் மேகத்தின்கண் மறைந்து இடையிடை சிறுவரை தோன்றி விளக்கந்தரும் மின்னொளி போன்று ஆருயிர்களுடன் விரவி வேறற நின்று இடையிடையே அருள் விளக்கம் தந்தருள்கின்றனன். அருள்வழிநிற்கும் ஆருயிர்களின் அன்புநிறை உள்ளத் தாமரையினை இடமாகக்கொண்டருள்பவன் சிவபெருமான். எங்கணும் உயிருக்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய் வேறறப் பொருந்நிநின்றருள்பவன் சிவபெருமான். (அ. சி.) விளக்கொளி - பரையாதி ஒளிகள். மின்னொளியாகி - மேகத்தில் மின் ஒளி மறைந்து நிற்பதுபோல. கரந்து - ஆன்மாக்களிடத்து ஒளித்து. (7) 2639. விளங்கொளி யவ்வொளி யவ்விருள் மன்னுந் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி யாரமு தாகநஞ் சாருங் களங்கொளி யீசன் கருத்தது 1தானே.
1. திறக்கப். அப்பர், 5. 50 - 8. " ஆலமே. 12. சம்பந்தர், 740. " இருநிலனதுபுன. சம்பந்தர், 1. 22 - 7.
|