2698. விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோருந் தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் 1பார்கட்கே. (ப. இ.) அழிவில்லாத வியத்தகு செம்மைவாய்ந்த சிறந்த திரு அம்பலத்தின்கண் கூத்தியற்றும் அம்பலக்கூத்தினுள் அழகிய பொன் போலும் திருவடித் தாமரைக்கண் நீங்காப் பேரன்பு பூண்பார்க்குக் காதலான் நினைக்கும் நினைவு மிகுதியான் உயிர்ப்புப் புலனாகும் கிடைக்கப் பெறாமையின் பேரச்சங்கொள்ளும் அச்சந்தோன்றும். தானே எழுந்துவிழும்; பின்னும் மெய் சோரும். திருவைந்தெழுத்தே திருவம்பலத்திற்குக் கொண்டுய்க்கும். காதன்மீக் கூர்தலினால் மேலென நிகழும் என்பதனைக் கண்ணப்ப நாயனார் திருவரலாற்றின்கண் மோகமாயோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்' என்பதனால் கண்டு தெளிக. (அ. சி.) திருவம்பலக் கூத்தில் அன்பு வைப்பவர்கட்கு ஏற்படும் மெய் அடையாளங்களை இம் மந்திரம் கூறுகிறது. (6) 2699. தேட்டறுஞ் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறுங் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறு மாசை அறுமுளத் தானந்த நாட்ட முறுக்குறு நாடகங் 2காணவே. (ப. இ.) புறஞ்சென்று ஒன்றைத் தேடுதல்வேண்டும் என்னும் எண்ணம் தோன்றாது. நாட்டமாகிய சிந்தை ஒன்றைத் தூக்கியும் எணணாது. அதனால் சிந்தைத் தேட்டறும் என்றனர். நாட்டம் ஈது யாதாகற் பாற்று எனத் தூக்கி எண்ணிய பொருளை மனம் பற்றி முற்பழக்கத்தால் இன்னதாகற் பாற்றென நினைந்தும், ஆமோ அன்றோ என ஐயுற்றும் திகைப்புறும். அத் திகைப்பும் எழுச்சி தூண்டத் தொழிற்படும் இறுப்பால் நீங்கும். எனவே மனம் என ஒருசொல் வருவித்து மனத்திகைப்பறும் என முடிக்க. உடம்பகத்து ஏற்படும் தளர்வு முதலிய வாட்டங்கள் நீங்கும் உயிர்ப்பு, இறுப்பு என்று சொல்லப்படும் புத்தியின் வயப்படும். வயப்படவே, புலன்களிலோடும் உயிர் அறிவின் ஓட்டறும். இவையெல்லாம் அறவே வேட்கையும் அவாவும் அறும். 'வேட்கையாவது பொருள்கள் மேற்செல்லும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை. ஆருயிரின் உள்ளத்துணர்வின்கண் திருவடிப் பேரின்பநாட்டம் முறுகி வளரும். இவையனைத்தும் அம்பலவாணரின் பொற்பதிக் கூத்தினை அன்புறக்கண்டு வழிபட்டு இன்புறுவார்க்கு நிகழ்வனவாகும். (அ. சி.) தேட்டறும் - ஆசைகெடும். வாட்டறும் - தளர்ச்சி நீங்கும். கால் - பிராணவாயு. புந்தியாகி - புத்தியின் வசப்பட்டு. புலன் ஓட்டறும் - புலன்கள் அடங்கும். முறுக்குறும் - முதிரும். (7)
1. கையும். 12. திருநாவுக்கரசர், 167. 2. சிந்தித்தாய். சிவஞானபோதம், 4. 1 - 2.
|