கூட்டங்களின் வேறு எனப் பிரித்துக் காட்டுவதும் காண்பதும் அறிவாகும். பிரித்துக் கண்டபின் உள்ளத்துள்ளே சிவவிளக்கினை ஏற்றுவாயாக. சிவவிளக்கினை ஏற்றுவதென்பது அச் சிவனை மறவாது நினைப்பதேயாம். பாடத்தை வரப்படுத்துவதென்பது இதற்கு ஒப்பாகும். அச்சிவ விளக்கினுள் ஆருயிர் விளக்கு ஒட்டியுறுமாறு தூண்டுக. தூண்டுதல் - விடாது அன்பு பூணல். திருவடியுணர்வாம் விளக்கினால் ஆருயிரின் அறிவுவிளக்கை விளங்குமாறு செய்யும் பெருங்காதலாம் பத்திவல்லார்க்கு அனைத்தையும் ஒருங்கு விளக்கும் சிவபெருமான் திருவடியிணையினைப் பொருந்திப் பேரின்பப் பெருவாழ்வு எய்துதலும் உண்டு. (அ. சி.) விளக்கைப் பிளந்து-தத்துவங்களினின்றும் ஆன்ம ஒளியை வேறுபடுத்தி. விளக்கினை ஏற்றி-சிவ ஒளி பரவும்படி செய்து, விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி - சிவ ஒளிக்குள் சீவ ஒளி விளங்கும்படிசெய்து. விளக்குடையான் - ஒளிக்கு ஒளியாயுள்ளவன். (6) 2774. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் 1தானன்றே. (ப. இ.) திருவருளால் மெய்யென்று கூறப்படும் தத்துவங்களின் உண்மையை அறிதல்வேண்டும். தத்துவ உண்மை அறிதலாவது அவைகள் காரியப் பொருள்களென்றும், அறிவில்லன என்றும், ஆண்டானால் உள்ளதாகிய மாயையினின்றும் படைக்கப்பட்ட அவன்றன் உடைமைப் பொருள்களென்றும், தோன்றிமறையும் தன்மைய என்றும், நமக்கு நாயகனளித்துள்ள இரவல் பொருள்களென்றும் உணர்தல். அங்ஙனம் உணருங்கால் அவற்றை உடைமையாகவுடைய உடையானாகிய சிவபெருமானும் அங்குத் தோன்றியருள்வன். அவனே தத்துவனாவன். அவனை அவனருளால் அறியும் ஆருயிர்களனைத்தும் மீளா அடிமைகளாகும். இவ்வகை உண்மையினையுணராதார் தத்துவ உணர்ச்சியிலராவர். தத்துவ உணர்ச்சி எங்கில்லை அங்குத் தத்துவனாகிய சிவபெருமானின் அருள் விளக்கமும் உண்டாவதில்லை. இவ்வகைய தத்துவ ஞானத்தின் தன்மையறிந்தபின் தத்துவனாகிய சிவபெருமானும் அங்கே தலைப்பட்டருள்வன். மெய் - தத்துவம். (7) 2775. விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின் றூறிய தாரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தங் கூடிநின் 2றானே. (ப. இ.) விசும் பொத்து எல்லையின்றி விரிந்த திருவடியுணர்வாகிய மெய்ஞ்ஞானத்தினுள்ளே, திருவடியின்பம் குறைவிலா நிறை
1. தத்து. அப்பர், 5. 46 - 7. 2. காலையே போன். 11. காரைக்காலம்மையார், அற்புதத், 65. " காலையிற். அப்பர், 4. 64 - 2.
|