(ப. இ.) எக்கால்த்தும் நீங்காது மிக்குறும் எழில் இன்பம் மக்கட்பேறு ஒன்றான்மட்டும் உண்டாம். அதனை, எய்துதற்கு மனையறம் பேணும் இயல்புடையிருவராகிய கணவனும் மனைவியும் விரும்பிக் கடவுளைக் கைதொழுது அவ்வழி முயலுதல் வேண்டும். அங்ஙனம் முயலுங்கால் இருவர்மாட்டும் ஒருவாப் பேரன்பு உண்டாகும். அவ்வன்பின் பெருக்கால் இருவரும் அகம்புறம் ஒத்துக்கூடுவர். அக் கூட்டத்துறுபயனால் கருவுறும். அக்காலத்து அருள்வெளியாகிய வானத்து வீற்றிருந்தருளும் சிவபெருமான் ஆருயிர் கருவிற் புகுமாறு திருவுள்ளங் கொள்வன். தொன்மையிலேயே ஊறிப் பொருந்திப் பொதிந்துள்ள துன்பவாயிலாம் ஆணவத்தை அறவே அகற்றுதற்கு ஆக்கிக்கொடுத்தருளும் உடல் அருவுடல். அருவுடல் என்றாலும் நுண்உடல் என்றாலும் ஒன்று. மாறிப் பிறக்கும் உயிர்கட்கு அவ்வுயிர்களின் வினைக்கீடாகப் பொருந்தும் பண்பும், வாழ்நாளும், நிலவுலக வாழ்க்கையில் ஏற்படும் செல்வ வறுமைகளும், கருவினுள் பதித்தருளினன். (அ. சி.) முன்பு ஊறிய - அநாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள. (3) 439. கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்துமற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே. (ப. இ.) பிறவாப் பெருநெறிபற்றிய திருவடியுணர்வு கைவந்த சிவனடியார் கருவை ஒழிந்தவராவர். அவர்கள் பருவுடலுக்கெனக் கண்டறிந்த (436) இருபத்தைந்து பொருள்களும் அவ்வுண்மையினைக் காணாதாரைப் பொருந்தும். அவர்களே மற்றோரார் என ஓதப்பட்டவராவர். திருமகளனைய வாழ்க்கைத் துணைவியின் கருவில் துணைவனது வெண்ணீர் ஓடிவிழுந்தது, ஆங்குள்ள செந்நீருடன், அதுகலப்புற்றது. அதனால் ஆண்பெண் என்னும் இரண்டாகிய வடிவங்களுள் ஒன்றாகத் திரிபுற்று வளர்ந்தது. வெண்ணீர் - சுக்கிலம். செந்நீர் - சுரோணிதம். (அ. சி.) கருவை ஓழிந்தவர் - சத்திநி பாதர். நால் மூவேழ் - 25 தத்துவங்கள். (4) 440. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும்1 ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்2 ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. (ப. இ.) வாழ்க்கைத் துணைவராங் காதலர் அன்புற்று இன்புறும் வாயிலாம் மகப்பெறுதற் பொருட்டுக் கூடிய கூட்டத்து இலிங்கமாகிய உருவுடம்புக்கு வாயிலாம் வித்துப் புகுந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் பொருட்டுக் கருவழியாகிய யோனி விரிந்தது. நுண்ணுடலில் தங்கியிருந்த ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் நுண்மை ஐந்தும்
1. சூக்குமங். சிவஞானசித்தியார், 2 - 2 - 45. 2. கரணங்க. 8. திருக்கோத்தும்பி, 9.
|