(ப. இ.) பையாகிய உடம்பினுள்ளே படி என்னும் நிலமெய்யினுக்குரிய முத்திரையாகிய கதவினால் அடைத்தால், உடம்பினுள்ளே நன்றாக விளங்கும் ஒளியுடையதாகிய உயிர்ப்பு நம் வரைத்தாகும். வரை - வசம். அவ்வுயிர்ப்பு ஒலித்துக்கொண்டு மேலெழும். மேலெழுந்தால், அருள் மழை தவழும் பரவெளிக் கோயிலின் செம்மணி விளக்கமாகிய இறைவன் காணப்படுவன். கையினுள் வாயு - கைவயப்பட்ட உயிர்ப்பு. கதித்து - ஒலித்து. (அ. சி.) பை - சரீரம். படிக் கதவு - கேசரி யோகம். (22) 801. விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே. (ப. இ.) ஒடுங்குகின்ற கழுத்தினிடத்தும் கொப்பூழினிடத்தும் விளங்குகின்ற உயிர்ப்பை மேல்நோக்கி எழுமாறு நினைந்து, கழுத்தினைச் சுருக்குதலாகிய சாலந்திரை முத்திரை ஒட்டியாணப் பிணிப்பு முத்திரைகளை ஆக்குதல்வேண்டும். அங்ஙனம் ஆக்கினால் சாலந்திரையால் மெய்யமிழ்து கீழ் ஒழுக ஒட்டாது தடைப்படும். ஒட்டியாணப் பிணிப்பால் உயிர்ப்பு மடங்கும். இவை வாய்க்கவே நெற்றிமண்டிலம் வாய்த்து அமிழ்து நிறையும். நிறைந்து வாட்டிடுதலால் நிலைபெற்று நிற்குமென்பது கூறுதலாகும். நலங்கிடுதல் - ஒடுங்குதல். கும்பிச்சு - நிறைந்து. (23) 802. சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ் சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ் சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற் சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே. (ப. இ.) மண், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐம்பூதங்களும் உடம்பகத்து ஒரு முகப்பட்டுக் கூடினால் உயிர்ப்பும் கைவயப்படும். உயிர்ப்பாகிய பிராணவாயு வயப்பட்டால் பரவெளி முழுமுதற் சிவத்தை அருட்கண்ணால் கண்டு கும்பிடுதலாகும். மாகம் - விண். கடினம் - ஈண்டுத் தீ தூரம் - பரவெளி. தெரிசனம் - கும்பிடுதல். (அ. சி.) மாகம் - ஆகாயம். அஞ்சு - பூதங்கள் அஞ்சும். தூர தரிசனம் - பரம்பொருள் தரிசனம். (24) 803. தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங் காராருங் கண்ணி கடைஞான முட்பெய்திட்டு ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் பாரா ருலகம் பகன்முன்ன தாமே.1 (ப. இ.) பரவெளி வணக்கமாகிய கும்பிடுதலைச் சொல்லப்புகின் மழைபோலும் திருக்கண்ணையுடைய திருவருளால் முடிஞானம் எனப்
1. முத்தன்ன 8, திருவெம்பாவை, 3.
|