396
 

(ப. இ.) ஊர்காவலராம் ஐயனாரும், நகர் காவலராம் வைரவரும், திருக்கோவிற் காவலராம் பிள்ளையார் முருகரும், திருவாயிற் காவலிருவரும், விந்து நாதம் முதலாகக் கூறப்படுந் தூமாயை ஐவரும், சிவகணத் தலைவர்களும் சிவசக்கரத்துள் நாட்டப்படுபவராவர். தானவர் - ஐயனார்; சாத்தனார்.

(அ. சி.) தானவர் - ஐயனார். சட்டர் - வயிரவர். சதிரர் - விநாயகர்; முருகர். ஆற்றவர் - வாயில் காப்போர். சேனை - சிவகணஙகள்.

(72)

966. பட்டன மாதவ மாறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

(ப. இ.) சிவசக்கரத்தினுள்ளே சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நானெறி நற்றவம் ஆற்றுவிக்கும் சிவபெருமான் திருவடிக்குத் தம்மை ஒப்புவித்தவர்கள் முழுமுதலே நமசிவய என வழுத்துவர். எள்ளளவு காலமும் சிவன் திறமே பேசுவர். அவன் திருவடியினையே உணர்வர். இவையன்றி வேறொன்றும் அறியார்.

(அ. சி.) பட்டனம் - சிவசக்கரம்.

(73)

967. வித்தாஞ் சகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

(ப. இ.) விந்துவின் காரியமாகிய உலகத்துள் மண்ணின் வடிவு போன்று நாற்கோண வரைகீறி விருப்பமுள்ள திங்கள் மண்டிலத்தின் கலை பதினாறும் நாட்டுக. அதன்பின் ஞாயிற்று மண்டில வேறுபாடாகிய பன்னிரண்டும் அமைக்க. பத்தாம் கலையாகத் தொகும் தீ மண்டிலமும் அமைக்க வித்து: விந்து நத்தார்: நத்து + ஆர் = விருப்பம் பொருந்திய.

(அ. சி.) வித்து - விந்து. நத்தார் - விருப்பமுள்ள. கலைபதினாறு - சந்திரமண்டலம். பன்னிரண்டாதி - சூரியமண்டலம். கலைதொகும் பத்தாம் - அக்கினிமண்டலம்.

(74)

968. கண்டழெுந் தேன்கம லம்மல ருள்ளிடை
கொண்டொழிந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென லாமே.1

(ப. இ.) நெஞ்சத் தாமரையினிடத்துச் சிவபெருமானைக் கண்டெழுந்தேன். அகத்துள் ஒற்றித்து ஒண்மை கொண்டுள்ளேன். சிவ சக்கரத்தின் பண்பகலாது அம் முறையைக் கைக்கொண்டு அடிமையாம் உறவெய்தி 'நமசிவய' வாழ்க என வாழ்த்துவோமாக.


1. உயிரா. அப்பர், 6. 25 -1.