728
 

கருதார். இதுவே பிச்சை பிடித்துண்டலாகும். பிச்சை - திருக்கோவிலுணா. நாம் சமைத்தாலும் உண்டாலும் ஆண்டவனுக்கு என்று எண்ணும் நினைவால் கோவிலுணா என்கின்றோம். பேதமற நினைப்பது இதுவே; இது கடைத்தேங்காய் என்பதை யொக்கும். வேறெப் பொருளிலும் தமக்கென்னும் வேட்கையினைவிட்டுச் சிவனிறைவில் ஒடுங்கிச் சிவனாய் ஒற்றுமைப்பட்டிருப்பர். இதுவே ஏகாந்தத் திருத்தல். உச்சிவேளையும் கதிரவனுடலுடனொன்றி உடலின் நிழல் வெளிவராதிருக்கும் வேளை. இதனைத் தன்னிழல் தன்னடியில் தங்குதல் என்பர். இதுவும் ஏகாந்தத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாகும். 'தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை, வீயா தடியுறைந் தற்று' (208) என்னும் திருமொழியும் இங்கு நினைவுகூர்க.

(அ. சி.) உள்ளமர் கோவிற்கு - உள்ளமாகிய கோயிலில் இருக்கும் ஆன்மாவுக்கு.

(2)


16. பிட்சா விதி

1849. விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே யுழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

(ப. இ.) உடலை வளர்க்கும் உணவினும் சிறந்தது உயிர்ப்பு. உயிர்ப்பு - பிராணவாயு. உயிர்ப்பு உடலைக் கால நீடிக்கச் செய்யும். உணவு பசித்துண்டு பின்னும் பசிப்பதனோடொக்கும். உயிர்ப்பு இயங்குதற்குரிய கலம் மூக்காகும். தக்க காவலையுடைய விளைநிலம் போன்றது புருவ நடுவாகிய ஆணையிடம். உச்சிக்கு நேராகப் புருவ நடுவின்கண் அகத்தவமாகிய யோகப் பயிற்சியால் உழவாகிய அமிழ்தம் சமைந்தது. கூற்றுவனுக்குச் சிறிதும் அஞ்சாது வயலறுப்பதுபோல் அவ்வமிழ்தத்தை அருந்தமாட்டாதார், உடன்மேல் வைத்த வேட்கையால் பிச்சை உணவினைப் பிறர் சமைத்துத் தர யிரந்துண்டு உழல்கின்றனர். யோக உணவாகிய அமிழ்து தாமே தமதுடலகத்துத் திருவருளால் சமைப்பது. உச்சிக்குமுன்னே என்பது உண்ணும் வேளையாகிய உச்சிக்குமுன் எனினும் அமையும். கலம் - கருவி.

(அ. சி.) விச்சுக்கலம் - (விச்சு - வித்து) உயிர் நிலைப்பதற்கு வித்தாயிருக்கின்ற பிராணவாயு இயங்கும் மூக்கு. வேலிச்செய் - ஆஞ்ஞை உச்சிக்கு முன் - உச்சிக்குக் கீழே புருவ மத்தி நேர். உழவு - யோகம். அச்சங்கெட்டு - பயம் இல்லாமல். செய்யறுத்து - அமிர்தம்கொண்டு. இச்சைக்கு - உடலை வளர்க்கும் ஆசை கொண்டு.

(1)

1850. பிச்சைய தேற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சைய தேற்றான் 1பிரியா அறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரமன் பரமாகவே.


1. செட்டிநின். ஆரூரர், 7. 43 - 9.