மருண்டு பெண்களையே உயிரெனப் பெருவேட்கைகொண்டு மருந்து பிறிதில்லாவாட்டம் எய்துவர். இவர்கள் உண்மைக்காதல் உயிர்க்காதல் உடையான்காதல் என்பதனை மறந்து உடற்காதல் உலகக்காதல் கொண்டு ஓவாது அலமருவோராவர். இதுவே காதலாஞ்சாறு. (25) 1925. சாற்றிய விந்து சயமாகுஞ் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை யெழமூட்டி நாற்றிசை யோடா நடுநாடி நாதத்தோ டாற்றி யமுதம் அருந்தவிந் தாமே. (ப. இ.) மேலோதிய விந்து கட்டும் வாயில் வருமாறு: திருவருட் சத்தியால் மூலத்திடத்து அனலை எங்கும் தன் உள்ளத்தைப் போகவிடாமல் 'சிவசிவ' என்றும் நான்மறையால் கைவரச்செய்து சிவயோகியாகிய தான் கூடும் தவயோக வாழ்க்கைத்துணையாம் பெண்ணின்பால் உள்ள செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடிக்கண் விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும். அதுவுமல்லாமல் நெற்றிவாயிலாகத் திங்கள் அமிழ்தத்தை அருந்துவதும் இதற்குத் துணையாகும். விந்து: சுக்கிலம்; வெண்ணீர். நாதம்: சுரோணிதம்; செந்நீர். (அ. சி.) விந்து சயம் - விந்துக்கட்டு. நடுநாடி நாதத்தோடு ஆற்றி - பெண்ணின் நாத சத்தியால் சுழுமுனை நாடியில் விந்து செல்லும்படி செலுத்தி. (26) 1926. விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவமக மாகவே விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே. (ப. இ.) மேலோதியவாறு விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடற்கண் பொருந்த மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி, நெஞ்சமானது பயிற்சிவயத்தால் உலகியலை நோக்காது மாறும்படி இடையறாது 'சிவசிவ' என்று எண்ணிக்கொண்டிருப்பச் சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும். வித்து - காரணமுமாம். மாளுதல் - கட்டுப்படுதல். (அ. சி.) கனன் மூல - மூலக்கனல். சிந்தனை மாற - உலக சிந்தை சிவத்தினிடம்மாற. விந்துவும் மாளும் - விந்துவும் கட்டப்படும். (27) 1927. வித்துக்குற் றுண்பான் விளைவறி யாதவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துச்சுட் டுண்பவன் வித்துக்குற் றுண்பானில் வேறல னீற்றவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித் தானன்றே. (ப. இ.) உலகுக்கு அச்சாணியாகத் திகழும் தாளாண்மையில் குறைவிலாவேளாளர்கள் எத்துணை யிடுக்கண் நேரினும் வித்தினைக்குற்றி
|