759
 

செய்யவல்லார்க்கு அவர்தம் தவ உடம்பு பொன்போன்று திகழும். எண்பெரும் சித்திகளும் தோன்றும். அவர்கள் இந் நிலமிசை நீடுவாழ்வார்.

(அ. சி.) சொன்னமுமாம் - தங்கம்போல் மாறும். அன்னவர் - விந்துவைக் கட்டினவர்.

(30)

1930. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றே டொன்றவை
சென்று பராசத்தி விந்து சயந்தன்னை
ஒன்ற வுரைக்க வுபதேசந் தானே.

(ப. இ.) ஓமொழிக்கண் அகரம் உகரம் மகரம் மூன்றும் முறையே இறை உயிர் தளையாகத் தோன்றும். இம் மூன்றெழுத்திற்கும் உயிராய்த் தோன்றுவது சிவ என்றும் சிறப்பு எழுத்தினில் முதற்கண் காணப்படும் சிகரமாகும். இம் மூன்றெழுத்தும் மூலத்திடத்தவாகும். இதன்கண் திருவருளாற்றலாகிய பராசத்தி விந்துவினைக் கட்டுப்படுத்தியருள்வள். இந்நிலை கைகூடுமாறு உயிராகிய சிகரத்தை முதலாகக்கொண்டு திகழும் திருவைந்தெழுத்தைச் சிவகுரு அருளிச்செய்ய மேற்கொண்டு கணிப்பது உபதேசமாகிய செவியறிவுறூஉவாகும். இது 'சிவயநம'.

(அ. சி.) பிராணனா...மூன்று - பிராணனாய்க் கருதப்படும் அகாரம் உகாரம், மகாரம்.

(31)

1931. தானே யுபதேசந் தானல்லா தொன்றில்லை
வானே யுயர்விந்து வந்த பதினான்கு
மானே ரடங்க அதன்பின்பு புத்தியுந்
தானே சிவகதி தன்மையு மாமே.

(ப. இ.) சிவகுரு அருளிச் செய்யும் 'சிவயநம' என்னும் தமிழ்மறை தானே உபதேசமாகும். சிவபெருமான்றன் கலப்பில்லாத ஒருபொருளுமில்லை. தூமாயையினின்றும் வெளிவந்த கலைகள் பதினான்கு என்ப. மானாகிய மனம் 'சிவசிவ' என வழுத்தும் நினைவால் செவ்வையுற்றடங்க அதன்பின் இறுப்பாகிய புத்தியும் அடங்க ஆருயிர் சிவத்தடங்க அதுவே சிவகதியாகும்.

(அ. சி.) விந்து வந்த பதினான்கு - விந்து மாயையினின்றும் வந்த பதினான்கு வித்தைகளும். மான் - மனம்.

(32)

1932. விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையுஞ் 1சிவோகமே.

(ப. இ.) விந்து நாதம் என்னும் இரண்டும் கட்டுற்று விளைய விளைந்தது உயர்திணை. வினைக்கீடாக ஆணையால் தோன்றிய இயங்குதிணை நிலைத் திணையாகிய பல உயிர்கட்குள்ளும் ஆறறிவு நிரம்பப்பெற்


1. அறிவரியான். சிவஞானசித்தியார், 12. 3 - 1.