760
 

றது உயர்திணை. மன்னுயிர்கள் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை முறையே 'சிவசிவ', 'நமசிவய' என்ப. இம் மந்திர வலியால் விந்துவினைக் கட்டுப்படுத்தியவர்க்குச் சிவோகமே விளையும்.

(அ. சி.) விந்து அடங்க - விந்து கட்டுப்பட.

(33)

1933. வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறுமந் நீள்வரை யொட்டிப்
பொறிக்கின்ற வாறுமப் பொல்லா வினையை
அறுக்கின்ற நால்வரும் அத்திப் பழமே.

(ப. இ.) திருவருள் வலத்தால் விந்துவினைக் கட்டுப்படுத்தும் முறை ஏற்படும். மனத்தை அடக்கிப் புலத்தைத் தன்வழிப்படுத்தும் வெற்றியும் உண்டாகும். அவ்வெற்றியினை மனத்தே நிறுத்தும் நிறையும் உண்டாகும். பொன்வரையாகிய நீண்டமலையை ஒத்த நடுநாடிவழியை ஒட்டிச் சேர்கின்ற முறைமையும் ஏற்படும். அக்காலத்துப் பிறப்பிற்கு வித்தாம் பொல்லாவினைகள் இரண்டும் அறுக்கப்பட்டொழியும். அப்பொழுது தொன்மையனாய்த் தீமேனியையுடைய நன்மையனாய் விளங்கும் 'கற்றவர்களுண்ணும் கனியாம்' சிவபெருமான் வந்தருள்புரிவன். அத் + தீ + பழம் என்பன அத்திப்பழம் என்றாயிற்று.

(அ. சி.) வறுக்கின்றவாறு - விந்துவைக் கட்டும் உபாயம். நிறுக்கின்ற - அடக்குகின்ற. நீள்வரை - வீணாத் தண்டு. பொறிக்கின்ற - சேர்க்கின்ற. அத்திப்பழம் - உடல்.

(34)

1934. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி 1யாகுமே.

(ப. இ.) விந்துவும் நாதமும் அருளால் பொருந்தி யுடன்கூடித் திங்களுடன் தலைப்படுமாயின் ஆயிரவிதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம்வந்து வெள்ளம்போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திருவைந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும்.

(அ. சி.) சந்திரன் - இடைகலை. அங்குதி மந்திரம் - அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.

(35)

1935. மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனங்
கனத்த இரதமக் காமத்தை நாடிலே.

(ப. இ.) இணைவிழைச்சாகிய காமத்தை விரும்பினால் மனத்தொடு பொருந்திய நிலையான எண்ணமும் மனங்கூடி உணரும் ஓசையும் என்று


1. அஞ்செழுத்தா. சிவஞானசித்தியார், 9. 3 - 2.

" கற்றாங். சம்பந்தர், 1. 80 - 1.