வந்தேறும் மருளினர். அக் கோள்கள்பால் மயங்கற்க என்று நால்வர் பாடிய மறையும் மூலர் பாடிய முறையும் ஆகிய திருவருட் செந்தமிழ் வேதாகமங்கள் ஆயிர்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு வரைசெய்து ஓதியருளின. அதன்பின்னும் நம்மனோர் அயல் மயக்கினின்றும் தெளிவுற்றாரல்லர். நம்மை வழிப்படுத்தும் செம்மை நெறிசேர் அருச்சகரேனும் தெளிவுற்றாரா எனின்? இல்லை! இல்லை! முக்காலுமில்லை யென்றே நல்லார் நவில்கின்றனர். நம்மவர்நிலை அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம், அவாவுண்டேல் உண்டாம் சிறிது' (1075) என்னும் நாயனார் பொதுமறைக்கு முற்றும் ஒவ்வும் எடுத்துக் காட்டாக இருக்கின்றது. இனியேனும் நம்மவர் நால்வர் வழிநின்று நல்லவராய் விழித்து எழுந்து மூலர் முறையினை முற்றுங் கைக்கொண்டு எல்லா நலமும் பெற்று வாழ்வாராக. சிவபெருமான் திருவருளும் துணைபுரிவதாக. இவ் வொன்பதினும் இயைந்தியக்கிப் பொருந்த நின்றருள்பவன் சிவன். அவனே முழுமுதல்வன் ஆவன். அவன் திருவருள் கைவரப்பெறாதார் 'இரு பிறப்பும் வெறுவியராய்' இன்பம் எய்தாதவராவர். அம்மட்டோ? பிறப்பு இறப்புக்கு உட்படுத்திப் பெருந்துன்பம் விளைக்கும் இருள்சூழ நின்றவருமாவர். (அ. சி.) ஒன்பது - ஒன்பது கோள்கள். (18) ஞானாதித்தன் 1956. விந்து அபரம் பரமிரண் டாய்விரிந்து அந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மிற் பரங்கலை யாதிவைத்து உந்தும் அருணோ தயமென்ன வுள்ளத்தே. (ப. இ.) விந்து என்னும் தூமாயை இருவகைப்படும் அவை, ஒன்று கீழ்நிலைவிந்து; மற்றொன்னு மேல்நிலை விந்து. இவற்றை முறையே பரவிந்து அபரவிந்து எனக் கூறுப. அபரவிந்துவானது பரநாதமாகத் தோன்றிற்று. அவற்றினின்றும் திருவருள் ஐவகைக் கலையாக விளக்க முற்றது. கலையெனினும் நிலையெனினும் ஒன்றே. அவை முறையே நீக்கி, நிலைப்பி, நுகர்வி, அமைப்பி, அழுத்தி என்பன. இவற்றை முறையே நிவிர்த்தி., பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்ப. இக்கலைகள் வாயிலாகச் சிவபெருமான் தூண்டித் தொழிற்படுத்துவன். இந்நிலையினைத்தான் ஆருயிர்களின் அகத்துத் தோன்றும் சிவசூரியன் என்ப. அதனையே அருணோதயம் என்ப. அருள்நன் தோற்றம் அருணோதயம். (அ. சி.) உந்தும் - நடத்தும். (19) 1957. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செய லென்பதால் வள்ளல் பரவிந்து 1வைகரி யாதிவாக்கு உள்ளன 2ஐங்கலைக் கொன்றாம் உதயமே.
1. வைகரி, உள்ளுணர், வேற்றுமைப், சூக்கும. சிவஞானசித்தியார், 1. 1 : 20 - 23. 2. நிகழ்ந்திடும.் " 24.
|