223. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. (ப. இ.) இளமைப் பருவம் தேய்ந்து ஒழிந்தன. கடைசியாகப் பருவ முடிவில் செயற்கருஞ் செயல்கள் பலவும் ஆய்ந்து முடிந்தன வாயினும் அவை செய்வதற்கு அருமையாய் முடியாமல் கழியும். வான் புனலாகிய ஆகாயகங்கை மிக்க வேகமாகப் பாய்ந்து வந்து இறைவன் திருச்சடையில் அடங்கிற்று. அத்தகைய திருச்சடையினையுடைய சிவபெருமானை உடம்பகத்து உயிர் நல்ல நிலைமையிலுள்ளபோதே திருவருளால் ஓர்ந்து திருவடியுணர்வால் கலந்து கொள்ளுங்கள். அரிய: பலவின் பால் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. (அ. சி.) தேய்... பாய்ந்தற்ற - இளமை கழிந்தால் அரிய கருமங்கள் செய்ய முடியா. கங்கை. . . போதே - இளமை நடமாடும்போதே நந்தியை நினை. (3) 224. விரும்புவர் முன்னென்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.1 (ப. இ.) யான் கட்டிளமையாக இருக்கும்போது அழகிய மெல்லிய இயல்பினையுடைய பெண்கள் முறையாக மணந்து கொள்ள விரும்புவர். அவ் விருப்பம் கரும்பை யொடித்து நன்றாகச் சாறு பிழிந்தெடுத்த தூய கருப்பஞ் சாற்றை விரும்புவதனை யொக்கும். முதுமை வந்துற்றபோது கோங்கரும்பினை யொத்த மெல்லிய முலையினையும் ஆராய்ந்து அழகாக அமைக்கப்பெற்ற சிறந்த அணிகலன்களையும் பூண்டுள்ள பெண்களுக்கு முன்னம் கரும்பொத்துக் காணப்பட்ட யானே காஞ்சிரங்காயாகிய எட்டியினை ஒத்து வெறுப்புக்கிடனாகக் காணப்படுவன். இது பருவமாறுதலினால் அன்பகல ஏற்படும் மனமாறுபாடென்க. (அ. சி.) முன் - இளமையில். காஞ்சிரங்காய் - எட்டிக்காய். (4) 225. பாலன் இளையன் விருத்தன்2 எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலங் கடந்தண்டம் ஊடறுந் தானடி3 மேலுங் கிடந்து விரும்புவன் நானே. (ப. இ.) பாலன், கட்டிளைஞன், கோல்காலாம் முதியன் என்னும் பருவங்கள் முறை முறையாகக் கழிவனவற்றைக் கண்டிருந்தும் நன்
1. விளைவறி. அப்பர், 4. 78 - 9. " வேம்பின். குறுந்தொகை, 196. 2. அண்ட. அப்பர், 5. 97 - 2. 3. பாலனாய்க். அப்பர், 4. 66 - 9.
|