455
 

யினள். சிவனும் பகுப்புடையான் என்னும் பொருளில் பகவனாயினன். அத்தகைய அறிவுப் பேரொளி நல்லாளைத் தம் ஆருயிர்த் துணையாகக் கொள்ள வல்லாரின் பிறவித் துன்பம் தீரும். அவ்வம்மை அருட்பெரும் வெளியாகும். வெள்ளடை - அருட்பெரும்வெளி.

(அ. சி.) பெய்ய - கொள்ள. வேதனை - பிறவித் துன்பம். வெள்ளடை - தெளிவு.

(3)

1134 .வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மன
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.

(ப. இ.) திருவருள்வெளியில் உறைபவன் சிவன். அவன்மிக்க கருமையும் தேனும் மணமும் நிறைந்த பூவும் விளங்காநின்ற மருள் மாதர் உள்ளத்தால் அள்ளிக்கொள்ளும் தன்மையன் அல்லன். ஆயினும் அச் சிவனும் அருள்மாதரால் தோற்றுவிக்கப்பட்டோன். அருள் மாதருக்கு அரையுடம்பு நல்கிய அப்பன். (ஆடவர் அருள்நாட்டமுடைய மாதர் துணையாற் சிவனை அடைந்து சிறப்புறுவர். மருள்நாட்டமுடைய மாதர் துணையாற் சிவனை அடையாது பிறப்புறுவர். இவ்வுண்மை முறையே வாழ்க்கைத்துணை நலம் பெண்வழிச் சேறல் என வள்ளுவர் வரை செய்த வாய்மையான் உணரலாம்.)

(அ. சி.) வெள்ளடை - பரமஆகாயம். கமழ்...அடையான் - மாதரால் கவரப்படும் தன்மையில்லாத சிவம். பிறவி பெண்ணும் - பிறவி பெண்ணிடத்திலேயே உண்டாம்.

(4)

1135 .பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

(ப. இ.) திருவருளாற்றலாகிய பெண் திருவருளையே திருவுருவாகக் கொண்டு திகழும் சிவனாகிய பெண்ணைக் கலந்திடும். (இஃது அறிவு அறிவொடு கலக்கும் குறிப்பு.) ஆருயிர்களின் அறியாமையாகிய பேதைமையையகற்றும் திருவருளாற்றலாகிய பெண்ணின் எண்ணமாகிய நடுவுள் அவ்வாற்றலைத் திருமேனியாகவுடைய ஆணாகிய சிவனும் தோன்றி நின்றனன். (பேணுதலால் பெண்; ஆளுதலால் ஆண்; பேணுதல்; ஏற்பித்தல். ஆளுதல் - இன்புறுத்தல்.) என் பிறப்பகற்றும் செவ்வியறிந்து தன் திருவடிக்கு ஆக்குகின்ற அருளே திருமேனியாகவுடைய சிவபெருமானின் உண்மையுணர்ந்தால் குறியால் உணரப்படும் பெண் ஆண் என்னும் பேச்சு அற்றுவிடும். ஈர்க்கின்ற - சேர்க்கின்ற.

(அ. சி.) பெண் - சத்தி. ஒரு பெண்ணை - பேணப்பட்ட ஒருவனாகிய சிவத்தை. (பெண்: பேண் என்பதின் குறுக்கம்) பெண்ணிடை யாணும் பிறந்து இருத்தல் - "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்ற வாக்கின் பொருள். பெண்ணுடை ஆண் மாதொரு பாகன்.

(5)