(ப. இ.) அமரர் கூட்டங்கள் பால், தயிர், வெண்ணெய்,1 நெய், மோர் எனவரும் ஆனைந்தும் சிவபெருமான் திருமுடிக்கு ஆட்டித் தொழுவர். அங்ஙனம் ஆட்டுவதும் என்றும் அழிவிலாது நின்று நிலவும் சிவபெருமான் திருவருளேயாம். தேனொழுகும் மலரினுள் மனநிறைவு தெளிந்ததோர் பொருளாவதுபோல், சிவபெருமானும் ஐம்பூதப் பண்பாகவும் கலப்பால் விளங்குவன். பூதப்பண்பு வருமாறு: நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்பன. கோநீர் கோமயம் ஏற்புடையனவாகா. (அ. சி.) ஆனைந்து - பால், தயிர், நெய், வெண்ணெய், மோர். ஆன் ஈண்டுப் பாலுக்கு ஆகுபெயர். "பாலாம் ஐந்துடன் ஆடும் பரமனார்" (சம்பந்தர்.) "கோதனத்தில் ஐந்தாடியை" (அப்பர்.) பார் ஐங்குணம் - நிலத்தின்கண் உள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். (9) 1801. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகின் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப் பிழைப்பின்றி எம்பெரு மானரு ளாமே. (ப. இ.) நன்னிலத்தில் காணப்படும் பூவும் புனலும் கைக்கொண்டு மழைமேகத்தின் மேற்கொண்டு பெருகிய அன்புடன் மைகதொழுது வணங்க, தவறுதலின்றிச் சிவபெருமான் திருவருள் கைகூடும் என்க. (அ. சி.) உழை - பூமி. தழைக்கொண்ட - சுற்றியுள்ள. பிழைப்பின்றி - தவறாமல். (10) 1802. வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் 2றாரே. (ப. இ.) திருச்சடையின்கண் கடல்போலும் வெள்ளநீரைத் தாங்கும் நந்தியாகிய சிவபெருமான் திருவடிக்கு, நிறைந்த கடல்போலும் அன்புள்ள நெஞ்சத்துடன் பூ முதலியன சுமந்து கொண்டு வந்து கடல் போலும் கள்ளங் கவடுகளை அகற்றி வழிபடும் சிவப்புண்ணியப் பேறிலாதார் துன்பக் கடலுள் அழுந்துவர். (அ. சி.) வெள்ளக் கடலுள் விரிசடை - கங்கையைச் சடையில் தரித்த. உள்ளக் கடல் - உள்ளத்தின்கண் எழும் அன்புக் கடல். வார் பெரிய. கள்ளக்கடல் - கடல்போலும் வஞ்சனை. அள்ளற்கடல் - ஒருவித நரகம். (11) 1803. கழிப்படும் தண்கடற் கவ்வை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோருச்சி மேவிநின் றானே.
1. நல்வெணெய். சம்பந்தர், 3. 96 - 1. 2. ஆப்பி. " " 95 - 3.
|