'தன் நாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' என்னும் அப்பர் அருண்மொழியான் உணரலாம். அதனால் தொம்பதமாகிய நீ என்னும் முன்னிலைப் பெயர் நீங்கும். பின்பு அவ்வுயிர் படர்க்கைப் பொருளுடன் படர்ந்து அதனுடன் பிரிப்பின்றி ஒன்றாய்க் கலந்து அதனுள்ளடங்கி அதன் பெயரே பெற்று விளங்கும். இப் பெயர் மன்னும் சார்பால் துன்னியதாகும். இந்நிலை மாற்றம் மனங்கழிய நிற்கும் போற்றரும் பொருவில் அருள்நிலையாகும். அதனால் அது பாழ் எனப் பகரப்பட்டது. அங்குச் சுட்டிறந்தறியும் அறிவிற்குப் புலனாம் அழகிய திருவருட் பேரொளியுண்டாம். ஆருயிர் அப் பேரொளியுடன் கலக்கும் - சாரும். சார்ந்த பின்பு அதற்கு ஒப்பாக வேறொன்றும் உண்டாகமாட்டது. (அ. சி.) செகமுண்ணும் போதம் - உலகத்தை அறியும் அறிவு. பாழ் - ஆசையற்ற இடம். (11) 2424. பண்டை மறைகள் பரவான் உடலென்னுந் துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக் கண்டு பரனுமக் காரணோ பாதிக்கே மிண்டி வைன்சுத்த னாகான் 1வினவிலே. (ப. இ.) பண்டைத் தொன்மைத் தென்மறைகள் தூமாயைக்குரிய மேல்வெளியாகிய பரவானைச் சிவபெருமானின் திருவுடலாகத் தெளியுமாறு செப்புகின்றன. எனினும் அவை ஏற்றுரையாகும். வளரும் பிறையாகிய துண்டமதி என்பது விளக்க விளங்கும் அறிவினையுடைய ஆருயிரின் அடையாளம் ஆகும். அம் மதியினைத் தாங்கும் சிவபெருமான் அப்பலைக்கு அப்பாலாவுள்ள துரியாதீதத்தனாவன். அந்நிலையில் திருவருள் நினைவால் தன்னைக் கண்டு காரணநிலையும் கடந்த நிலையே சிவபெருமான் நிலையாகும். உலக காரணமாகிய தூமாயையைப் பொருந்திய உயிர் முழுநிலையாகிய தூநிலையை எய்தியதாகாது. இதனை வினவி ஆராயின் இதற்கும் அப்பாலாகிய மேனிலை புலனாகும். (அ. சி.) பண்டை மறைகள் - பழைய தமழ் நான்மறைகள் (இது புதிதாகத் தமிழ்நாட்டில் நுழைந்த ஆரிய மறைகளை நீக்கிக் கூறியது ஆகும்.) பரவான் - பரமாகாயம், காரணோபாதி - சுத்தமாயை; மிண்டினவன் - சேர்ந்தவன். (12) 2425. வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற தளியா கியதற் பரங்கா ணவன்றான் வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற வெளியாய சத்தி யவன்வடி 2வாமே. (ப. இ.) வெளியாகிய விசும்பு, காலாகிய காற்று, கனல், நீர். மண் என்று சொல்லப்படும் ஐந்தின்கண்ணும முறையே பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை
1. மண்முதல். சிவஞானபோதம், 9. 3 - 3. " பண்டைமறை சிவஞானசித்தியார், மெய்கண்டார் வாழ்த்து. 2. எண்ணகத். அப்பர், 4. 64 - 6. " ஆணையா. சிவஞானசித்தியார், 2. 2 - 28.
|