1038
 

(ப. இ.) உலகியற் பொருள்களின் உண்மையினைத் திருவருளால் உணர்ந்தேன். உணர்தலும் அவற்றின் மாட்டு முன்கொண்டிருந்த நிலைக்கும் என்னும் பற்றும், தனியுடைமை என்னும் துனிதரு உரிமையும், இவற்றால் வரும் தருக்குங்கொண்டு மருள் வயத்தனயாய் இருளில் வீழ்ந்து இடருற்ற நிலைமையினின்று நீங்கினேன். நீக்குதல் - துறத்தல். (நீக்குதல் - துரத்தல்.) நீங்கித் திருவடிப்பற்றிற் புகுந்தேன். புகுந்து அருள் நினைவால் இயற்கை அறிவருள் ஒண்மைப் பேரொளியைக் கண்டு கொண்டனன். கண்டதும் அடியேனுள்ளம் விரைந்து சென்று பற்றிப் பணிந்து கிடந்தது. பணிந்து கிடந்தே மறவா நினைவாய் உறவாயுற்றது. உறுதலும் வானவர் முழுமுதல்வனாய சிவபெருமான் எளியேனை இறந்து பிறவாமல் சிறந்து திருவடியைத் தலைக்கூடும் செந்நெறியில் வைத்தருளினன். வைத்து நன்னெறிக்குய்ப்பதும் 'நமச்சிவாயவே' என்று நவின்றருளினன்.

(15)

2541. மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் 1மெய்த்தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.

(ப. இ.) மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் நிலையில்லாத தோற்றத்தினையுடைய அறிதற் கருவியாம் ஐம்பெறிகள் போன்று எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் உட்கலன்களும் ஆகும். உட்கலன் - அந்தக்கரணம். இவற்றை அருளால் சார்ந்த ஆருயிரும், உலகமும் உலகியற் பொருள்களும் விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவுள்ளத்தான் ஆட்ட ஆடுகின்றன. மெய்கண்டானாகிய சிறப்பு ஆருயிர்களும் நாடரிய நன்மைக்கண் உள்ளன. சிறந்த ஒழுக்கத்தினையும் திருநெறியினையும் இடையறாது மேற்கொண்டு ஒழுகினவராய் வாழ்தல் வேண்டும் : வாழவே ஆருயிர் கேடின்றிச் சார்ந்த சிவபெருமான் தன்மையாய் எங்கும் நிறைந்த சிவனுருப் போன்று எங்கும் நீக்கமற அவனுடன் செறிந்து பெரும் சிறப்பாய்க் காணப்படும்.

(16)


27. விசுவக்கிராசம்
(உலகுயிரொடுக்கம்)

2542. அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் 2பரத்தே


1. விளம்பிய. சிவஞானபோதம், 5.

" மூக்கு. அப்பர், 5 . 47 - 7.

2. ஆளென்ப . 11. பட்டினத். கோயினான்மணி, 24.

" தானான, ஒருவனவன். தாயுமானவர். ஆகார - 22, 29.

" சித்த. உன்னுமனம். " பராபர - 245, 256.