(அ. சி.) நந்தமை உண்டு - ஆன்மாவைச் சிவமயமாக்கி. நேய அந்தத்து - சிவதுரிய அதீதத்தில். நாம் - பெத்தர்களாகிய நாம். (8)
28. வாய்மை 2550. அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. (ப. இ.) பற்றற்றான் பற்றினைப் பற்றி ஏனைப் பற்றற்றுநின்று ஒழுகும்பெருநெறி திருநெறியேயாகும். அந்நெறிக்கண் பெரும் 'நமசிவய' முதல் 'சிவசிவ' ஈறாகக் கூறப்படும் நான்மைத் திருவைந்தெழுத்தும் செவியறிவுறூஉவாகிய நல்லுபதேசங்களாகும். அம்மறையால் ஆருயிர் கனலிடைப் புடம்போட்டு எடுத்த 'சுடச்சுடரும் பொன்போல்' ஒளிவிடும். ஒளிவிடவே குற்றங்கள் அறுமாறு சிவபெருமானிடத்து நாட்டமாகிய சிந்தையை நாளும் நிறுத்தங்கள். அங்ஙனம் ஒழுகுவதால் மாறுபடு ஏதும் இன்றி உடனாய்ச் செயலற்றொடுங்கும். சமாதிநிலை கைகூடும். மாயைத் தொடக்கு பசைத்தொடக்கு முதலிய எல்லாத் தொடக்கும் அறுத்தருளிய முழுமுதற் செழுஞ்சுடர் சிவபெருமானேயாவன். நான்மைச் சிவமறையே நற்குறிகை பொன்னாக்க மேன்மைச் சிவ சிவவாம் வேண்டு என்பதனை ஈண்டு நினைவுகூர்க. மேலும், "நாடும் நமசிவய நல்ல சிவயநம கூடும் சிவயசிவ கூறிமேல் - நாடும் சிவசிவஎன் றெண்ணுவர்நற் சீலமுதல் நான்கின் தவநெறிசார் செந்தமிழர் தாம்." என்பதையும் நினைகூர்க. (அ. சி.) அற்றது - பற்றற்ற நெறி. குற்றமறுத்த பொன் - புடமிட்டு மாசொழிந்த பொன். அற்றற - மாசு நீங்க. வைத்திறை - சிவத்தில் சிந்தையை நிறுத்தி. மாற்றற ஆற்றிடில் - மாறுபாடு ஓழியச் சமாதி எய்தினால். செற்றம் - மலம் நீங்கின. சுடர் - ஒளி பொருந்திய ஆன்மா. (1) 2551. எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென 1லாமே.
1. சேரர். 12. சேரமான்பெருமான். 19. " எவரேனும். அப்பர், 6. 61 - 3.
|