(ப. இ.) சிவபெருமான் திருவடியுணர்வு ஒருவர்க்குத் திருவருளால் கைவருமானால் பகலவன் ஒளியில் தடையின்றி எல்லாவற்றையும் வெளியுறக் காணுமாறுபோன்று அகத்தும் புறத்தும் எல்லாவற்றையும் எளிதில் இருந்த இடத்திலிருந்தே அவர் காண்பர். அவ்வுணர்வினை அடைய முயலாது கைவிட்டுச் சிலர் உலகியற்பொருள்களை நூலுணர்வானும் நுண்ணுணர்வானும் உய்த்துணர்வானும் உணர்கின்றனர். அங்ஙனம் உணர்ந்தும் அடையும்பேறு ஒன்றும் இன்று எல்லாவற்றையும் ஒருங்கே யறிந்து அறிவித்துவரும் முழுமுதற் சிவபெருமான் எல்லாம் அறிந்த அறிவினன் ஆவன். அவனை அவனருளால் நீங்காநினைவால் உளத்தமைத்த உரிமை உறுதிப்பாட்டால் அவனே நானென்னில் திருவடிப்பேறு உண்டாகும். எல்லாம் அறிந்த இறை எனலும் எய்தும். இந்நிலை சாரப்பட்டார்க்குச் சார்பின் பெயரே அமைவது போன்றதோர் மரபாகும். அது சிவனடியாரைச் சிவனெனவே கண்டு வழிபட்டுத் தெளியும் செந்நெறிமுறைமையான் உணரலாம். மெய்கண்ட நாயனாரும் 'ஆலயந்தானும் அரனெனத் தொழுமே' (12) என்றருளியதும் இக்கருத்துப் பற்றியேயாம். மேலும் உலக வழக்கிலும் பூ முதலிய விற்பவரை அப்பண்டப் பெயரால் 'ஏ! பூ!' என அழைப்பதூஉம் காண்க. (அ. சி.) எல்லாம் - உலகப்பொருள்களை. எல்லாம் - அறிவு நூற் பொருள்களை எல்லாம். எல்லாம் அறிந்த அறிவனை - சிவனை. (2) 2552. தானே யுலகில் தலைவ னெனத்தகுந் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் 1றாகுமே. (ப. இ.) திருவடியுணர்வு கைவரப்பட்ட ஒருவர் உலக முதல்வரெனப்படும் தகுதியினராவர். அவரே உலகினுக்கு மெய்ப்பொருளுணர்த்தும் மெய்ம்மையருமாவர். செந்தமிழ் மாமறைகள் வானே பொழிவிக்கும் வன்மை வாய்ந்தது. அம்மறையினால் மிகச் செய்யும் திருவைந்தெழுத்தைக் கணிப்பதால் ஊனே உருகிய உள்ளம் உள்ளத்துள்ளுறையும் ஒப்பிரலாச் சிவபெருமானுடன் ஒன்றாய் ஒடுங்கும். (3) 2553. அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே. (ப. இ.) சிவபெருமான் திருவருள் கைவரப்பெற்றதன் காரணம் என் கொல் என ஆராயின், திருவருள் விளக்கால் சிந்தை இருள்கின்ற பின் அவ்வுள்ளத்தின்கண் இறைவனை நாடி அதுவே விருப்பமாக விருப்பதாகும். அமரில் - விருப்பமாகவிருந்தால். அவ்விறைவன் திருவருளால் மருளுற்ற சிந்தையை மாற்றுவர். அருமைப் பொருள் உற்ற
1. அனுச. அப்பர், 5. 65 - 6. " மின்னானை. " 6. 46 - 2.
|