1065
 

ஒருசிறிதும் இல்லாத புனிதனை. அன்புடன் நாடுங்கள், அங்ஙனம் நாடினால் அளவில்லாத ஆருயிர்களுள் நும்மைச் சிறப்பாகத் தெரிந்தெடுத்து நுமக்குத் திருவடிப் பரிசினைச் சேர்த்தருள்வன்.

(7)

2596. தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் என்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானன்றே.

(ப. இ.) சிவகுருவாய் எழுந்தருளிவந்து எனக்கெய்திய அறுவழி ஆய்வு செய்தருளும்போது அச் சிவபெருமான் உடனாந் தன்மையால் நல்ல நாதனாகி அங்கே தொடர்ந்துநின்றருளினன். ஒன்றாந் தன்மையில் ஆதிப் பெரும்பொருளாம் அவன் நீக்கமற நிறைந்துநின்றருளினன். எந்தையாகிய அவன் பொருள்தன்மையால் கடந்துநின்று திருவடிசேரும் அருட்பெரும் வழியைக் காட்டியருளுகின்றனன்.

(8)

2597. அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தைதாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானன்றே.

(ப. இ.) அமரர்களுக்கும் அறியவொண்ணாத அரும்பொருளாம் சிவபெருமான் திருவடிப் பேற்றினுக்காம் அவ்வழியினைக் காட்டியருள்கின்றனன். இவ்வழியாகிய இவ்வுலகத்து எனக்குத் தந்தைதாய் கேள் ஒத்துத்தோன்றாத் துணைபுரிந்தருளுகின்றனன். அவன் செம்பொருள், செம்மை நலம்புரியும் விழுப்பொருள். செவ்வழியாய்ச் சென்று சேர்தற்குரிய சிவலோகமாகிய அம்மைக்கண் திருந்த இருந்திடும் அரும்பொருள். இம்முறையே நந்திப்பெருமானின் நல்லியல்பாகும்.

(9)

2598. எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குந் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி 1டாரே.

(ப. இ.) மும்மலமாகிய மாயப்படைகளைத் திருவருளாகிய உறையினுள்ளிருக்கும் திருவைந்தெழுத்தாம் ஞானவாட்படையினை வெளிப்பட எடுத்து எறிவது திருவாணைவழி யொழுகும் அடிமையின் முடிவில் கடனாகும். எறியவே அப் படைகள் அஞ்சி அகலும். அங்ஙனம் அஞ்சியகலவே திருவடியுணர்வு திகழ்ந்தோங்கும். ஓங்கவே அதனால் அறிவது அவ்வாண்டகையாகிய சிவபெருமானை. தேவர்பிரானாகிய அச்சிவபெருமானுடன் இரண்டறக்கலந்து செறிந்திருப்பது அவ்வழிப்பேறாகும். அப்பேறு எய்தவே வேறு பலவகையான மாயாகாரியப் பற்றுவிடாச் சிறப்பிலார் சேர்வு பறிவதாகும். பறிவது - ஓட்டெடுப்பது.

(10)


1. ஞானவாள். 8. திருப்படையெழுச்சி, 1.

" வீட்டில். திருவுந்தியார், 30.