1107
 

பொருளாம் ஐம்புலன்களினும், நெறி நூலாம் வேதங்களினும், திருவைந்தெழுத்தின் சிரிப்பான் மிகுந்து சிவ வழிபாட்டினையே கிளர்ந்தெடுத்து ஓதும் துறை நூலாம் ஆகமங்களிலும் ஓதியொழுகும் ஏனைக் கலைகளிலும், காலத்திலும், ஊழியிலும், அண்டத்துணர்வாகிய ஐந்தினும் விழுமிய முழுமுதற் சிவபெருமான் வேறறப் புணர்ந்து திருக்கூத்தாடுவன். அவனே சித்தன் என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருப்பெயரினையுடையன்.

(7)

2685. தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதா சத்தர் சமயஞ் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை 1யாடவே.

(ப. இ.) சிவபெருமான் எங்கணும் நீக்கமற நின்றருளும் சிறப்பினன். அதனால் எவ்வுயிரும் எப்பொருளும் புடைபெயர்வதானால் அவன் திருவுள்ளப் புடைபெயர்வின் திருக்குறிப்பானாகும். அதனால் எல்லாப் புடைபெயர்ச்சியும் அவன் புடைபெயர்ச்சியே எனக் கூறுவர். அதனையே அவன் ஆடல் எனவும் கூறுப. பிறப்புத் தேவரும், சிறப்புத் தேவராகிய சுரரும், நரரும், சித்தரும், வித்தியாதரரும், மூவர்களும், நால்வேறியற்கைப் பதினொரு மூவராகிய முப்பத்து மூவர்களும், தாபதரும், எழுமுனிவரும், சமயத்தாரும், இயங்குதிணைப் பொருள், நிலைத்திணைப் பொருள் ஆகிய அனைத்தும் சிவபெருமான் ஆட ஆடும்.

பிறப்புத் தேவர் - வானுலகத்தே இயற்கைப் பிறப்பெய்தியவர். சிறப்புத் தேவர் நிலத்திற் பிறந்து புண்ணியப் பேற்றால் தேவராய்ச் சிறப்புற்றவர். நரர் - மக்கள். முப்பத்து மூவர் ஆதித்தர் பன்னிருவர். உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர். தாபதர் - முனிவர். சமயம் சமயத்தோர். நால் வேறியற்கை - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர் என்னும் நால்வகை இயற்பிரிவு.

(அ. சி.) தேவாசுரர் - தேவர்களும் அசுரர்களும். சித்தர் - வாமிகள்.

(8)

சுத்தரக் கூத்து

2686. அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் 2தானன்றே.

(ப. இ.) ஏழண்டங்கட்கு அப்பாலும் அதற்கப்பாலும் உண்டு என்று ஓதப்படும் சத்தியாகிய திருவருள், அருளோன் என்று சொல்லப்படும் சதாசிவ தத்துவத்துச்சியின்மேற் கண்டங்கரியதாய் அருளே திருவுருவாய் நின்று உமையம்மையார் கண்டுகளிக்கத் திருக்கூத்தி


1. மூவரும். 8. திருவெண்பா, 9.

2. மனத்தகத்தான். அப்பர், 6. 8 - 5.

தேய்பொடி. " 4. 8 - 3.