1109
 

"புரமெரித்தல் சூர்மாத் துளைபடுத்தல் கஞ்ச
னுர னெரித்தல் வாணனைவான் உய்த்தல் - பெரிய
அரன்முத லாகவே லன்முதன் மாயோ
னமர்முத லாடிய வாறு."

(அ. சி.) இம்மந்திரம் கூத்துக்களின் வகைகளை விளக்குகின்றது :-

(1) கொடு கொட்டி - எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடும் கூத்து.
(2) பாண்டம் - பாண்டரங்கம் எனவும்படும் முப்புரங்களை எரித்த காலத்தில் அந் நீற்றினை அணிந்து ஆடிய கூத்தின் பெயர்.
(3) கோடு - காபாலக் கூத்து. பிரமனது சிரசைக் கையில் ஏந்திக் கொண்டு ஆடிய கூத்து.
(4) சங்காரம் - நாள்தோறும் நடக்கும் அழித்தற் றொழிலுக்காக ஆடும் கூத்து.
(5) நடம் எட்டு - ஐந்தொழில் நடத்துடன் காளிக்கூத்து, முனி நடனம், ஆனந்த நடனம் ஆக எட்டு.
(6) ஐந்து - குற்றாலம், கூடல், தில்லை, பேரூர், ஆலங்காடு இவைகளில் ஆடிய கூத்துக்கள் ஐந்து.
(7) ஆறு - ஆறு சமயங்களிலும் அவ்வவர் சமயத்துக்கேற்ற கூத்துக்கள் தேவதாருவாம் தில்லை - தெய்வத்தன்மை பொருந்திய தில்லை மரங்கள் உள்ள வனம். வடம் - ஆலமரம். மாவனம் - பெரியகாடு.

(2)

2688. பரமாண்டத் தூடே பராசத்தி பாதம்
பரமாண்டத் தூடே படரொளி ஈசன்
பரமாண்டத் தூடே படர்தரு நாதம்
பரமாண்டத் தூடே பரன்நட மாமே.

(ப. இ.) பரமாண்டம் எனப்படும் அப்பால் அண்டத்தூடு பராசத்தியாகிய வனப்பாற்றலின் திருவடி காணப்படும். அவ்வண்டத்தூடு நனிமிகு ஒளியுடைய ஆண்டவன் காணப்படுவன் அதனூடு ஓசை மெய்யாகிய நாதம் காணப்படும். அவ்வண்டத்தூடு பரனாகிய சிவபெருமான் நடமாடி யருள்கின்றனன்.

(3)

2689. அங்குச மென்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

(ப. இ.) செம்பொருட்டுணிவின் நன்னெறியே சன்மார்க்கம் எனப்படும். அந்நன்னெறி அங்குசம் என்னும் தோட்டியை ஒத்தது. அஃதாவது 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்துங் காக்கும், வரனென்னும் வைப்பு'