லால் ஏத்துங்கள். ஏத்தவே, அகத்துக்கண் உள்ள அழுக்காறு, அவா வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கும் அழுக்கும் அப்பொழுதே அறும். அறவே, அவ்வயிற்றுக்குழி அந்நொடியே தூரும். தூர்ப்பான் - நிரப்பும்படி அழுக்கு - மலம். தூர்ப்பான்: பானீற்று வினையெச்சம். (அ. சி.) பொய்க்குழி - வயிறு. (2) 254. கற்குழி தூரக் கனகமுந் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. (ப. இ.) ஒன்றானும் ஒரு காலத்தும் தூர்க்க முடியாத குழியென்பார் 'கற்குழி' என்றனர். அஃதாவது வயிறு. அக் குழியைத் தூர்க்க வேண்டிப் பொன் முதலியவற்றைத் தேடுவர். எப்படிப்பட்டவர்க்கும் அருள் துணையின்றி அக் குழியைத் தூர்க்க முடியாது. அக் குழியினைத் தூர்க்கும் அறிவாகிய திருவடியுணர்வை உணர்ந்தபின் மலமாயைகன் மங்களாய அழுக்கறும்.. அழுக்கறவே அக் குழி தானே தூரும். (3) 255. தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய1 கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்2 தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. (ப. இ.) ஓருயிரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டு வரும் சுற்றத்தார் வினையினும் கொடியர்: ஆவி உடம்பைவிட்டுக் கடந்து கழிவதன் முன்னே ஐம்புலன்கள் வழிச் செல்லாது மாறுபட்டு ஒரு காலத்துத் திருவடியுணர்வாகிய திருவிளக்கினைத் திருவருளால் ஏற்றுங்கள். அங்ஙனம் ஏற்றினால் எக்காலத்தும் மனமாசாகிய அழுக்கறும். பிறப்பறுவதாகிய குழியும் தூரும். கடந்தது என்பது கடந்து என்னும் வினையெச்சப் பொருள் தந்து நின்றது. உடந்து என்பது உடன்று என்பதன் திரிபு. உடன்று - மாறுபட்டு. (அ. சி.) உடந்து - வருத்தப்பட்டு. (4) 256. அறுத்தன ஆறினும் ஆனின மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன்3 ஈசனை வேண்டிநின் றானே. (ப. இ.) அறுசுவையினை மிகுதியும் விரும்பியுண்பான் கழிபேரிரையான் என்று கருதப்படுவான். அதனால் அவன் ஆனின முதலிய
1. மக்களே. அப்பர், 4. 79 - 2. 2. உடம்பெனு." " 75. 4. 3. வெறுத்தேன். ஆரூரர், 7. 4 - 8.
|